பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்கள் 83 சுடுவதில், ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர் சுவிஸ் காட்டவரைத் தவிர, அமெரிக்கரே யாவர். அமெரிக்காவில் மிகப்பலர் ஆடும் ஒரு விளை யாட்டு, பெளலிங் (Bowling) என்பது. மரத்தாலும் எஃகாலும் செய்யப்பட்ட 14 ராத்தல் எடையுள்ள பந்துகளை, ஸ்பிரிங் உள்ள ஒரு பலகையின்மீது 100 அடித்தொலைவு உருட்டி, அப்பந்தைக் குழிக் குள் விழச் செய்வதே இந்த ஆட்டமாகும். இவ்வாட் டத்தை நள்ளிரவு வரையில் ஆடும் அமெரிக்கர் சிற் றூர்களிலும் உள்ளனர். நள்ளிரவில் டென்னிஸ் ஆடுவதும் அமெரிக்கர் இயல்பாகும். பகலில் ஓய்வு இல்லாதிருப்பதும், எவ் விதமாவது நாள்தோறும் விளையாட வேண்டுமென்ற மனஉறுதியுமே இப்பழக்கத்துக்குக் காரணமாகும். டேவிஸ் கப்' என்ற டென்னிஸ் ஆட்டத்தின் தலை மையான பரிசையும் பல ஆண்டுகளில் அமெரிக்கர் பெற்றுள்ளனர். புகழ் பெற்ற டென்னிஸ் வல்லுநர், பிறருக்கு டென்னிஸ் ஆட்டம் பயிற்றும் கல்லூரிகள் நடத்துகின்றனர். அமெரிக்க நாட்டு விளையாட்டான பேஸ்பாலில் சிறந்த ஆட்டக்காரர்கள் தம் குழுவில் சேர்ந்து கொண்டு, நான்கு மாதங்கள் ஆடுவதற்காகப் பல கழகத்தார் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ஒரு நூறாயிரம் ரூபாய்வரை கொடுக்கின்றார்கள். இதனால் விளையாட்டும் ஒரு தொழிலாகிவிட்டது. ஆட்டக்கா ரர்களிலும், ஆட்டமே தொழிலாக உள்ளவர் (Professionals), பொழுது போக்குக்காக ஆடுபவர் என்ற பாகுபாடும் ஏற்பட்டிருக் விளையாட்டுக்களுக்கான கருவிகளைச் கின்றது.