பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் செய்து, அவற்றை விற்றுப் பெருஞ் செல்வரான வரும் மிகப் பலராவர். எல்லா அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் மிகப் பெரிய விளையாட்டிடங்களும் உடற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. ஆண்டுதோறும் அமெரிக் கர் விளையாட்டுக்களில் 100 கோடி ரூபாய்க்குமேல் செலவிடுகின்றனர். சுருங்கச்சொன்னால்; அமெரிக் கரின் இந்தத் தலைமுறையினர் ஆடவரும் பெண் டிரும் - தம் வாழ்நாள் முழுவதும் விளையாட்டுப் பித்துடையவராயிருக்கின்றனர். இவ் வகையில் இவர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் வேறெங்கும் இல்லை. ஆஸ்திரேலியரின் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலிய நாட்டினரின் சிறப்பான விளை யாட்டு கிரிக்கட். தான் ஒரு பிராட்மன்1 ஆகவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆஸ்திரேலிய இளைஞ னுக்கும் ஆசை, பிராட்மன் எத்தனைமுறை செஞ் சரி2 எடுத்தார்? மிகுதியாக எடுத்த எவ்வளவு? எத்தனைமுறை 'நாட் அவுட் ஆக இருந்தார்? என்ற புள்ளி விவரங் சீன் 34 1 பிராட்மன் என்பவர் உலகிற் சிறந்த கிரிக்கட் ஆட்ட காரர். இவர் ஓர் ஆஸ்திரேலியும். 1948 வரை ஆஸ்திரேலியக் கிரிக்கட் குழுவுக்குப்பல ஆண்டுகள் இவரே தலைவராக (Captain) இருந்தார். 2. செஞ்சரி - 100 ரன்கள். . 3 ரன்- கிரிக்கட் ஆடும் மைதானத்தில், நடு இடத்தில் மும் மூன்று குச்சிகள் ஊன்றப்பட்ட இரு இடங்களுக்கிடையே ஓடு து, 4 காட் அவுட் - எதிரிகள் தன் ஆட்டத்தை முடித்துவிடாத படி:போட்டி முடியும் வரை ஓர் ஆட்டக்காரர் ரன்களை எடுத்துக் கொண்டேயிருப்பது.