பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்கள் 85- களெல்லாம் ஆஸ்திரேலியாவில் இளங்குழந்தைக் கும் தெரியும். பெரிய கிரிக்கட் ஆட்டக்காரர்களா கிய அமர்நாத், துலிப் சிங் என்னும் இரண்டு இந்தியரை யும் பற்றிக் கேள்விப்படாத செவியே ஆஸ்திரேலி யாவில் இல்லை. ஆஸ்திரேலியாவில் மின் சாரக் கருவிகள் செய்யும் ஒலிம்பிக் கேபிள்ஸ் என்ற கம் பெனித் தலைவரோடு ஒரு மணி நேரம் வாணிகம் பற்றிப் பேசினேன். 1947-ல் இந்தியாவிலிருந்து சென்ற கிரிக்கட் ஆட்டக்காரர்களைப்பற்றியே அவர் அரைமணி நேரம் பேசினார். ரவை ஏற்றுமதி செய்ய அனுமதி பெறக் கோதுமைக் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளை மெல்பர்னில் கண்டு பேசினேன். நம் நாட்டு ஆட்டக்காரர்களாகிய மெர்ச்சண்ட், மோடி இருவரும் எப்போது ஆஸ்திரேலிய விளையாட்டிடன் களில் கிரிக்கட் ஆடுவார்கள் என்று அவர்கள் என்னை வினவினர். பொதுவாக, நம் நாட்டுக் கிரிக் கட் ஆட்டக்காரர்கள் இந்திய ஆஸ்திரேலிய நல் லுறவைப் பெரிதும் வளர்த்திருக்கிறார்கள் என். பதில் அணுவளவும் ஐயமில்லை. ஆஸ்திரேலியருக்குக் கிரிக்கட் உடன் பிறந் தது. ஆங்கிலேயர்கள் அறிமுகமில்லாதவர்களுடன் பேசும் போது, காலநிலையைப் பற்றித்தான் பேசத் தொடங்குவார்கள்; ஆஸ்திரேலியர் கிரிக்கட் என்ற பிள்ளையார் சுழியோடுதான் தொடங்குவார்கள். 1948-ல் எல்லா ஆஸ்திரேலியர்களும் பார்த்த சினிமாப்படம் "பிராட்மன் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்" என்பதுதான்! ஈடுபட பிராட்மன் அரசியலில் வேண்டுமென்றுகூட ஆஸ்திரேலியா வில் ஒரு கட்சி இருக்கிறது. நகைச்சுளை