86 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அரசரான, என்.எஸ். கிருஷ்ணன் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்க வேண்டுமென்று ஓர் இயக்கம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அதைப் போன்றது தான் இதுவும். மெல்பர்ன் விளையாட்டிடத்தில் ஒரு கிரிக்கட் பந்தயம் பார்த்தேன். அவ்விடம் சென்னை நகராண் மைக் கழக விளையாட்டிடத்தின் அளவுதான் உள் ளது. ஆனால் அங்கே இருப்பதற்குரிய வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. மேலும் எவ்விதத் தட்ப வப்ப நிலையிலும் சுகாதாரத்துடன் இருந்து பார்ப்பதற்குரிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மிகப்பலர் கிரிக்கட் பற்றிய கடைசிச் செய்தி களை அறியப் பத்திரிகைகள் வாங்குவர். பெரும் பாலும், முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தி கிரிக் கட்டைப் பற்றியதாய்த்தான் இருக்கும். இந்தியா வில் நடைபெறும் கிரிக்கட் போட்டிகளைப்பற்றி நம் நாட்டுப் பத்திரிகைகளில் வெளியாகும் விவரங்கள் ஆஸ்திரேலியப் பத்திரிகைகளிலும் வெளியிடப்படு வது எனக்குப் புதுமையாகவே இருந்தது. இப் போது ஆஸ்திரேலியப் பெண்களும் கிரிக்கட் தொடங்கிவிட்டனர். கிரிக்கட்டுக்கு அடுத்தபடி ஆஸ்திரேலியருக்கு மிக விருப்பமான விளையாட்டுக்கள் - குதிரைப் பந்த யம், டென்னிஸ், படகோட்டல், மீன் பிடித்தல், காடுகளில் கூட்டம் கூட்டமாக நடந்து இயற்கை வனப்பைக்கண்டு இன்புறுதல், நீந்துதல், ஈருருளி களை (Bicycle) ஓட்டுதல் முதலியனவாம். உலகிலேயே குதிரை ஓட்டுபவர்களில் கைதேர்ந்த பலர் ஆஸ்திரேலியரேயாவர். உலகிற்சிறந்த குதிரை
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை