பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையாட்டுக்கள் 87 களும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. நம் நாட்டுப் படைக்குக்குதீரைகள் அங்கே இருந்துதான் இறக்கு மதி செய்யப்படுகின்றன. உலகில் சிறந்த குதிரைப் பந்தயத் திடனும் மெல்பர்ன் என்ற ஆஸ்திரேலிய நகரில் இருப்பதேயாம். குதிரைப் பந்தயம் ஆஸ்தி ரேலியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. சிட்னி நகரத்துக் குதிரைப்பந்தயத் திடலில் 100 புக் கிகள்' இருந்தனர்; ஆனால், அண்மையிலுள்ள நியூ சீலந்தில், புக்கிகள் தடை செய்யப்பட்டு, டோட்ட லைசர்' மட்டுமே இருக்கிறது. நீந்துவதற்கு உதவியாக, சிட்னி நகரக் கடற்க கரையில், மலைப்பகுதிகளின் ஓரத்தில், கடல் நீர் தங்கும் பகுதிகள் தடுக்கப்பட்டுள்ளன. அங்கே பெருக்கு- வடிவு காலங்களில் நீரைத் தூய்மையாக்கு கின்றனர். . கிரிக்கட், ஈருருளி ஓட்டுதல்,டென்னிஸ் ஆகிய வற்றில் ஆஸ்திரேலியர் உலகின் முன்னணியிலுள் ளனர். ஆயினும் நீந்துவதில் ஜப்பானியரை ஆஸ்தி ரேலியர் வெல்ல இயலாது. இப்பகுதியில், இப் போது ஆஸ்திரேலியர் மிக்க கவனம் செலுத்தி வருகின்றனர். பாட்மின்டனும், இரவில் நிகழும் ஓட்டப்பந்த யங்களும் ஆஸ்திரேலியாவில் மிகுந்து வருகின்றன. 1950ல் நியூசீலந்தில் நடக்கவிருக்கும் பிரிட்டிஷ் பேரரசின் விளையாட்டுப்போட்டிகளுக்குத் தம் நாட்டு 1 புக்கி - பந்தயங்களை ஏற்றுக்கொள்வதே தொழிலாக உள்ள கடை . 2 டோட்டலைசர் - பந்தயத்துக்கு வந்திருப்பவர்கள், அவர் கள் கட்டிய பணம், அவர்கட்குக் கிடைக்கக்கூடிய ஈவுத்தொகை ஆகிய கணக்குகளை அவ்வப்போது அறிவிக்கும் மின்சாரக் கருவி.