பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் 91 காட்டவருக்குக் கிடையாது. இக்காரணத்தாலும் நெருக்கம் மிகுதியான நகரங்களிலிருந்து சிறிது நேரம் விடுதலை பெறுவதற்காகவும் மேல்நாட்டவர் கள் அடிக்கடி அந்த நிலையங்களுக்குச் செல்லுவர். குறிப்பாக வார இறுதிநாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கானவர் அச்சாலைகளை மொய்ப்பார்கள். அந்நாட்களில் அச்சாலைகளுக்குப் போய்வர நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து தனிப் பட்ட பஸ்களும் ரயில்களும் விடப்படுகின்றன. அண்மையில், இந்தியாவிலிருந்து ஒரு யானை அனுப்பும்படி ஜப்பானியக் குழந்தைகள் நமது பிரதமமந்திரிக்கு எழுதியதற்கிணங்க, இந்திரா என்ற யானை அனுப்பப்பட்டவுடன், அங்கே அந்த யானை வரவேற்கப்பட்ட முறையிலிருந்து, பிற நாட்டவ உயிரினங்களின்மீதுள்ள விருப்பத்தை ருக்கு நாம் அறியலாம். பார்வையாளருக்குச் செய்துள்ள வசதிகள் எல்லா உயிர்க்காட்சிச் சாலைகளிலும் குழந்தை கட்கு மிகக்குறைவான கட்டணம் உண்டு. டிக்கட் வாங்கும்போதே, அந்தச்சாலையின் வரலாற்றைக் கூறும் பதிப்பு ஒன்றும், இன்ன இன்ன உயிரினங் கள் அச்சாலையில் இன்ன இன்ன இடங்களில் உள்ளன என்ற விளக்கம் அடங்கிய படமும் கொடுக்கப்படும். உணவுச்சாலைகளும் இன்றியமை யாப் பண்டங்கள் விற்கும் சிறு கடைகளும், இளைப் பாறுவதற்குப் பல இடங்களும் முதற் சிகிச்சை செய்யும் அலுவலகமும் அச்சாலைகளுக்குள்ளேயே உண்டு.

காணாமற்போன பொருள்களைத் தேடிவைத்துத் தரும் அலுவலகமும், காணாமற்போன குழந்தைகளைத் 837