Y 92 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் தேடி ஒப்புவிக்கும் இடமும்,பார்வையாளர்கள் பயன்படுத்துவதற்காக டெலிபோன் கருவிகளும் ங்கே அமைக்கப்பட்டிருக்கும். மிருகங்களின் மீது குழந்தைகள் சவாரி செய்ய ஏற்பாடு செய்யும் அலுவலகமும் அங்கே இருக்கின்றது. க்காட்சிச்சாலைகள் பரப்பில் மிகப் பெரியன் வாக இருப்பதால், எல்லா இடங்களுக்கும் குழந்தை களால் நடக்க இயலாதென்று கருதிப் பெற்றோர் கள் அக்குழந்தைகளை மூன்று உருளிகளுள்ள சிறு கைவண்டிகளில் வைத்துச் சாலை முழுவதும் தள்ளிக் கொண்டே செல்லுவர். இவ்வண்டிகள் சாலை அலுவலகத்தில் வாடகைக்குக் கிடைக்கும். படமும் இடமும் விலங்கு முதலியவைகளின் உருவப்படங்கள் எல்லாச் சாலைகளிலும் விற்கப்படும். பார்வையாளர் பலர் தாமே அவற்றைப் படம் எடுத்துக்கொள்ளு வர். சிலர் தம்மைக் குறிப்பிட்ட விலங்குகளுடன் விளையாடுவதுபோல் படம் எடுத்துக்கொள்ளுவதில் விருப்பமுடையோராயிருப்பர். இந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவும் அந்தச் சாலைகட்குள் ளேயே புகைப்படம் எடுக்கும் கடைகள் உள்ளன. சில உயிர்க்காட்சிச்சாலைகளில், ஒவ்வொரு விலங்கின் அருகிலும் உலகப்படம் ஒன்று வைக்கப் பட்டிருக்கும். அப்படத்தில், உலகில் அவ்விலங் குள்ள இடங்கள் எல்லாம் மின்சார உதவியால் விளக்கமாகப் காட்டப்பட்டிருக்கும்.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை