பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

முன்னேற்றத்திற்கு உழைத்தாலன்றி, உரியபங்கை பெற இயலாது. கெஞ்சிக் கேட்பதன் மூலம் பலன் ஏற்படாது. கோரிக்கைகளை வற்புறுத்தவேண்டும், பிச்சையின் மூலம் வெற்றியை தேடமுடியாது.

அடிப்படைத் தொழில்கள், பெரிய துறைமுகங்கள், அணு சக்தி தயாரிப்பு போன்ற திட்டங்களுக்கு பெரிய தொகைகள் ஒதுக்கியாகவேண்டும். மாறிலத்துறையின்கீழ் அமையக் கூடிய திட்டங்களுக்கும் பெரிய தொகைகள் தேவைப்படுகின்றன.

எனவே கேட்கப்பட்டிருக்கும் தொகை, போதுமானதென்று கருத இடமில்லை.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் குறைந்தது 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அளவிற்கு மத்திய, மாநில திட்டங்களை ஆராயவேண்டும் என்று அரசினரை கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நீடித்துவந்த புறக்கணிப்புக்கும், பின் தங்கிய நிலைமையும், நினைவில் கொள்ளும்போது, இந்த தொகையைகேட்பது நியாயத்திற்கு புறம்பானதென்றோ, பேராசையானதென்றோ எண்ணவும் இடமில்லை.

திட்டக் குழு இரண்டு மூன்று முறை கூடிவிட்டால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிட இயலாது. அவ்வப்போது கூடவேண்டும். ஆலோசனைக் குழுக்களும், நிபுணர்களும் கூடி திட்டங்களை ஆராய்ந்து உருவாக்கவேண்டும். இதுதான் ஆளும் கட்சியின் நோக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

திட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்றாகும். கூடிக் கலந்துப் பேசி, கட்சிகளின் ஆதரவையும், நல்லெண்ணத்தையும் பெறுவது புதிய வலிவையும்,

உணர்வையும் ஏற்படுத்தும்.