பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கொள்கைகளிலும் எனக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை என்பதே கிடையாது. ஆனால் கடவுள் ஒருவர் உண்டு என்பதில் மாத்திரம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தது.

புரட்சி இயக்கத்திலும் போலிகள் !

பிற்காலத்தில் நான் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டேன். அங்கு முதன் முதலில் நான் சந்தித்த தலைவரானவர் கடவுள் உண்டு என்ற பூரண நம்பிக்கை உடையவர் அல்ல. என்றாலும் கடவுள் இல்லை என்றும் கூற அவருக்குத் துணிவு ஏற்படவில்லை. கடவுளைப்பற்றி நான் இடைவிடாது வற்புறுத்தி அவரிடம் கேட்கும் போதெல்லாம் அவர், “உனக்கு இஷ்டமிருந்தால் மாத்திரம் கடவுளை வணங்கு” என்றே சொல்லி வருவார். இந்தப்பதில் ஒரு நாஸ்திக உணர்ச்சியே ஆனாலும், பகிரங்கமாக நாஸ்திகத்தை ஒப்புக்கொள்வதற்குரிய அந்த தைரியம் அவருக்கு இல்லை. யான் சந்தித்த இரண்டாவது தலைவரோ பழுத்த ஆஸ்திகர். அவரது பெயர் கண்ணிடமிக்கத்தோபர் சசீந்திரநாத் சன்யால் (கராச்சி சதி வழக்கில் சம்பந்தப்பட்டு, இப்பொழுது ஆயுட்கால தீவாந்திர சிஷை அனுபவித்துக் கொண்டிருப்பவர்). அவர் “பண்டி ஜீவன்” அல்லது “அடிமை வாழ்க்கை” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அது மிகவும் புகழ்பெற்றது நூலின் முதற்பக்கத்திலேயே, கடவுளின் பெருமையைப்பற்றி உத்வேகத்தோடும். ஆத்திரத்தோடும் பாடப்பட்டிருக்கிறது. அதனுடைய இரண்டாம் பாகத்தின் கடைசி பக்கத்தில் வேதாந்தத் தத்துவங்கள் செறிந்த ஈஸ்வர ஸ்தோத்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றை அவருடைய அபிப்பிராயங்களின் முக்கியாம்சம் எனக் குறிப்பிடலாம். 1925 ஜனவரி மாதம் 28ந் தேதி இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட “புரட்சித்துண்டுப் பிரசுரம்” அவருடைய புத்திக் கூர்மையின் விளைவே என்று பிராசிகூசன் தரப்பாரால் எடுத்துக்காட்டப்பட்து. கீர்த்தி வாய்ந்த தலைவர் தாம் அருமையாகப் பாராட்டுகிற அபிப்பிராயங்களை வெளியிடுகிறார். அவரைப் பின்பற்றுவோர் தாங்கள் மாறுபட்ட அபிப்பிராயமுடையோராயிருந்த போதிலும், அவருக்கு உடன்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது. இது