பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உத்வேகமும் உச்சி முதல் உள்ளங்கால் வரையிற் கொண்ட தோழர்கள்—ஏன் தலைவர்கள்கூட—எங்களைப் பார்த்து பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள் எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென்பதாகப் பிற்காலத்தில் எப்பொழுதாவது ஒருநாள் உணரும்படியான நிலைமை வருமோவெனச் சில சமயங்களில் பயந்ததுண்டு அது எனது புரட்சி வாழ்க்கையில் புதியதொரு மாறுதலை உண்டாக்கிய சம்பவமாகும். “கற்றுணர்—எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்” என்னும் உணர்ச்சிகள் என்னுடைய மனத்தின் வாசற்படியில், கடல் அலைகளைப் போன்று கிளம்பித் தாவித் தாவி முட்டின—மோதின. நானும் விஷயங்களைக் கற்றுணர—தெள்ளிதில் ஆராய்த்தறிய ஆரம்பித்தேன். என்னுடைய பழைய நம்பிக்கையும், முடிவுகளும் சிறப்பாக ஒரு பெரும் மாற்றம் கொண்டன. எங்களுக்கு முன் இருந்துவந்த புரட்சிக்காரர்களிடையில், மனக்கோட்டையான பலாத்கார ரகசிய முறைகளே பிரதானமடைந்திருந்தன. பற்பல புதிய அபிப்பிராயங்களால் அவைகள் மாற்றமடைவதற்கு இடம் தரவேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட மாற்றத்திற்கு மூடுமந்திரமோ மூடநம்பிக்கையோ சிறிதும் அவசியமில்லை எனக்கண்டு அனுபோக சாத்தியமான உண்மை தத்துவத்தையே கடைப்பிடித்தோம். தடுக்கமுடியாத நிலையில் அதுவும் அவசியம் நேர்ந்தால் பலாத்காரப் பிரயோகம் நியாய ரீதியானது என்று உணர்ந்தோம். ஆனால் “பொது ஜன இயக்கங்கள் எல்லாவற்றிற்கும் ‘சாத்வீகம்’ என்பது காரியம் சாதிக்கும் தோரணையில் அவசியமானது”. இவ்வளவுதான் இவற்றைப்பற்றிய இரகசியம்.

பச்சை நாத்திகனானேன்

ஆனால், நமது போராட்டத்திற்குரிய லட்சியம் எது என்று தெளிவாக அறிந்திருக்கவேண்டியதே மிகமுக்கியம். நாங்கள் காரியத்தில் காட்டித் தீரவேண்டிய குறிப்பான