பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஏற்பட்டதாகும். போலீசார் என்னைத் தேடித் திரிகிறார்கள் என்ற விசயம் எனக்குக் கொஞ்சமும் தெரியவராது. நான் ஒரு தோட்டத்தின் வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பொழுது திடீரென என்னைப் போலீசார் சூழ்ந்துகொண்டதைக் கண்டேன். அச்சந்தர்ப்பத்தில் நான் மிகுந்த சாந்தமாகவும், ஆச்சரியப்படும்படியாகவும், அமைதியாகவும், பொறுமையாகவும் கொண்டதானது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அது சமயம் நான் எவ்விதமான பரபரப்பும் துடிதுடிப்பும் கொள்ளவோ இல்லை. போலீஸ் பந்தோபஸ்துக்கு கொண்டுபோகபட்டேன். மறுநாள் நான் ரயில்வே போலீஸ் சிறைக்குக் கொண்டு செல்லபட்டேன். அங்கு ஒரு முழு மாதத்தைக் கழிக்கவேண்டியிருந்தது. போலீஸ் அதிகாரிகளோடு பல நாட்கள் சம்பாசித்ததன் பயனாக என்னுடைய அரஸ்டுக்குக் காரணமாய் கோரிக் கட்சியில் எனக்குள்ள தொடர்பைப்பற்றியும், புரட்சி இயக்க சம்பந்தமான என்னுடைய செய்கைகளைப் பற்றியும் அவர்களுக்கு சில தகவல்கள் கிடைத்திருக்க வேண்டுமென ஊகித்தேன். அதாவது லக்னோவில் விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் நான் அங்கிருந்துவந்தேனென்றும், அவர்களுடைய விடுதலைக்காக ஒருவிதமான திட்டத்தைப் பற்றி நான் அவர்களோடு கலந்து ஆலோசித்தேனென்றும், அவர்கள் சம்மதம் பெற்ற பிறகு நாங்கள் சில வெடி குண்டுகளைத் தயாரித்தோமென்றும், அவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக 1926-ம் ஆண்டு தசராப் பண்டிகையின்போது பெருங்கூட்டத்திடையே ஒரு வெடிகுண்டு வீசியெறியப்பட்டது என்றும், அவர்கள் என்னிடம் கூறினார்கள். என்னுடைய சொந்த நன்மையை உத்தேசித்து புரட்சி இயக்க சம்பந்தமான நடவடிக்கைகளைப் பற்றிய சில உண்மைகளை நான் வெளியீடுவதாய் இருந்தால் என்னைக் கைதியாக வைத்திருப்பதில் இருந்து விடுதலை செய்யப்படுவதோடு கோர்ட்டில் அப்ரூவராக (கோர்ட்டு சாட்சியாகக்)கூட கொண்டுவந்து நிறுத்தாமல் எனக்கு வெகுமதி அளிக்கப்படுமென்றும் வெகு வினயமாக அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். நான் அவர்களு-