பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

எவ்விதப் பிரார்த்தனையும் செய்யவேயில்லை. எனது உண்மையான சோதனைகள் அதுதான். நான் அதில் வெற்றி சூடினேன்.

துணிவு ஒரு விளையாட்டுப் பொருளல்ல!

எந்தக்கணத்திலும் எந்தவித முகாந்தரத்தைக் கொண்டும் நான் என்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை! இவ்விதமாக நான் பழுத்த நாஸ்திகனானதோடு. அதன்பின் அவ்விதமே வாழ்ந்தேன் கொடிய சோதனையின் முன் நிமிர்ந்து நிற்பது ஒரு விளையாட்டுக் காரியமல்ல. தெய்வ நம்பிக்கை, கஷ்ட நிஷ்டூரங்களைச் சாந்தப்படுத்துகிறது. அது அவைகளை இனிமையாகவுஞ் செய்யும். மனிதன் கடவுளிடத்தில் மிகுந்த ஆறுதலையும். தேறுதலையும் காணக்கூடும். சண்டமாருதங்களுக்கும் பிரசண்டமாருதங்களுக்கும் இடையில் தன் காலிலேயே நிற்கத் துணிவது பிள்ளை விளையாட்டுப்போல் எளிய காரியமன்று. இத்தகைய சோதனைக் காலங்களில் அகங்காம்—ஏதேனுமிருந்தால்-புகைந்துப் போய்விடும். பொதுவாக மனிதன் தெய்வ நம்பிக்கையை மறுதலித்துப் பேசத் துணியமாட்டான். அவ்விதம் பேசத் துணிவானாயின், அவனிடம் கேவலம் அகங்காரத்தைத்தவிர, வேறு சில சக்திகளிருக்க வேண்டுமென்று நாம் தீர்மானிப்பதே முறை. எனது அப்போதுள்ள நிலைமையும் அதுவே விசாரணையில் தீர்ப்பு எவ்வாறாகுமென்பதோ, முன்னமேயே மிக நன்றாகத் தெரிந்த விசயம். ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. ஒரு லட்சியத்திற்காக எனது வாழ்வைத் தியாகம் செய்யப்போகிறேன் என்ற அபிப்பிராயம் நீங்கலாக வேறு ஏதாயினும் உண்டா? நம்பிக்கையுள்ள ஓர் ஹிந்து மறுபிறப்பில் ஓர் அரசனாகப் பிறக்கலாம் என்று பார்க்கலாம். ஒரு முஸ்லீமோ அன்றி ஒரு கிறிஸ்தவனோ தன்னுடைய நஷ்டங்களுக்காகவும் தியாகத்திற்காகவும் சன்மானமாக சொர்க்கத்தில் போகபோக்கியங்களை அனுபவிக்கலாமென்று கனவு காணலாம். ஆனால், நான் எதை எதிர்பார்ப்பது? என்னுடைய கழுத்தைச் சுற்றிக் கயிறு மாட்டப்பட்டு, காலடியிலுள்ள பலகை