பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

டைப் பழங்காலத்திலிருந்தே தனிப்பட்ட சுயேச்சையுடையதாக விளங்குகிறது. அவர் அந்த மிகத் தொன்மையான காலத்திலேயே கடவுள் ஒருவர் உண்டா? என்று (ஆஸ்திகர்களை) அறைகூவி அழைத்திருக்கிறார் மதங்கள் அவைகளின் கொள்கைகள், யாவும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று மாறுபட்டும் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கையே சரியானதென்று கருதுகிறார்கள்—இந்த வேற்றுமைதான் நமது துர்ப்பாக்கிய நிலைமையின் வித்து. அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நமது வருங்காலப் போராட்டத்தின் அஸ்திவாரமாக, முற்கால விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி மிகுந்த அறிஞர்களும் கைக்கொண்ட பரிசோதனை முறைகள், மொழிப்பிரயோகப் போக்குகள் ஆகியவற்றை உபயோகித்து, இந்த மாயா ரகசியப் பிரச்சினையைத் தீர்க்க வழிகோல வேண்டும். நாமோ அவ்விதம் இன்றி, பழைய பெத்தான் பெத்தான் என்ற கதையில், சுத்தச் சோம்பேறிகளாய் மதம் மதமென்று உரத்த கூச்சலிட்டு, மனித நாகரீக முற்போக்கில்லாத பெருத்த குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறோம்.

பழைய நம்பிக்கையைப் போட்டிக்கழைக்க !

முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும், பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீரவேண்டும். பழைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்துத் தீரவேண்டும். பிரஸ்தாபத்திலிருக்கும் மத சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றுக்கும்—எவ்வளவு அற்ப சொற்பமானதாயிருந்தாலும்—காரண காரியங்கள் கண்டுபிடித்துத் தீரவேண்டும். இவ்விதமாக ஆழமாய் ஆராய்ச்சி செய்தபின், ஒருவன் ஏதேனுமொரு கொள்கையை அன்றி, கோட்பாட்டை நம்பும்படி நேர்ந்தால், அவனுடைய நம்பிக்கை தப்பும் தவறுமுடையதாக தவறான வழியில் செலுத்தப்பட்டதாக, மயக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும், அவன் சீர்திருத்தமடைவதற்கு இடமுண்டு. ஏனென்றால், பகுத்தறிவே அவனுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிர்கின்றது. ஆனால், விருதா நம்பிக்கையும் குருட்டு