24
நடத்திக்கொண்டிருக்கிறதென்பதுதான் நமது தத்துவ சாஸ்திரத்தின் சாரம்.
கேள்விகள் எழுப்புகிறேன்
நாஸ்திகவாதத்தின் சார்பாக நான் சில கேள்விகளை ஆஸ்திகர்களிடம் கேட்கிறேன். (1) நீங்கள் நம்புவது போல் சர்வ வியாபியும், சர்வக்ஞனும், சர்வசக்தனுமாகிய ஒரு கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், அவன் ஏன் இதைப் படைத்தானென்று தயவுசெய்து கூறுங்கள். அந்தோ! துன்பமும், துயரமும், கஷ்ட நிஷ்டூரங்களும் நிறைந்த உலகம்! பலதிறப்பட்ட சதா இருந்துகொண்டிருக்கிற கணக்கு வழக்கற்ற முடிவுகள் ! பூரணமாக திருப்தியடைந்த ஜீவன் ஒன்றுகூட இல்லை.
தயவுசெய்து தெய்வ சங்கற்பம்—கடவுள் சித்தம்—ஈசன் இட்ட சட்டம் என்று கூறிவிடாதீர்கள். அவன் எந்தச் , சட்டத்திலாவது கட்டுப்படுத்தப் பட்டுவிட்டால், அவன் சர்வ சக்தியுடையவனல்ல. அவனும் நம்மைப் போன்ற மற்றொரு அடிமையாகத்தான் இருக்க முடியும். அது அவனுடைய பொழுதுபோக்கு—தமாஷ் (Enjoyment) லீலா வினோதம் என்பீர்களோ? தயவுகூர்ந்து அவ்வாறு சொல்லாதீர்கள். நீரோ என்பவன் ரோமாபுரியை எரித்தான் ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஜனங்களையே அவன் கொன்றான். அவன் சில பயங்கரமான—துக்கம் நிறைந்த சம்பவங்களைத்தான் உண்டுபண்ணினான். தான் பூரண மகிழ்ச்சியடைவதற்காகவே, இவற்றையெய்லாம் அவன் செய்தான். இதன் பயனாக சரித்திரத்தில் அவன் பெற்ற இடம் என்ன? சரித்திரக்காரர்கள் அவனை எப்பெயரிட்டு அழைக்கின்றனர் தெரியுமா? கொடிய அடைமொழிகள் யாவும் அவன் மீது சரமாரியாகப் பொழியப்பட்டிருக்கின்றன. “நீரோ, கொடுங்கோலன், ஈரமற்றநெஞ்சினன். கேடுகெட்டவன்” என்றுபலமாகக் கண்டித்து, கர்ண கடூரமான தூஷணை சொற்களால் வசைமாரி செய்திருப்பதால் சரித்திரத்தின் பக்கங்கள் கறைபட்டுப் போயின. செங்கிஷ்கான் என்பவன் தனது சந்தோஷத்தையும் இன்பத்தையும் நாடி சில ஆயிரம் பேர்களை பலியிட்டான். நாம் அவனை மிகக்