பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

போராடி, அந்தக் கொடிய மிருகங்களால் ஏற்படும் மரணத்திலிருந்து தப்பித்துக்கெண்டாரானால், அவர்களைப் பின்னால் பாதுகாத்து நல்லமாதிரியிற் பராமரிப்பதற்காகவேயென்று காரணம் கூறுகிறார்கள். இந்த நியாயம் பொருத்தமாயிருக்கமுடியுமா? முடியாது. இதனாலேதான் அந்த முழுமுதற் கடவுள் எதற்காக உலகத்தைப் படைத்து, அதில் மனிதனைச் சிருஷ்டித்தான் என்றும், தமாஷ் பண்ணி பொழுதுபோக்கவென்றால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசமென்றும் நான்கேட்கிறேன்.

மகம்மதியர்களே ! கிருஸ்தவர்களே ! உங்களையும் கேட்கிறேன் !

ஏ மகமதியர்களே ! கிருஸ்தவர்களே!! இந்துக்களின் தத்துவசாஸ்திரமோ இன்னுமொரு காரணத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஊசலாடுகிறது. ஆகவே முதலில் உங்களைக் கேட்கிறேன். மேலே குறித்த கேள்விக்கு விடை என்ன? முற்பிறப்பில்—ஜென்மத்தில்—உங்களுக்கு நம்பிக்கை இல்லை போன ஜென்மத்தில் செய்த தீவினையின் பயனாகவே இந்த ஜென்மத்தில் குற்றமற்ற நல்லோர்கள் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு ஆளாகிறார்களென்று இந்துக்கள் சொல்வதுபோல் நீங்களும் தர்க்கம் செய்ய முடியாது. நான் உங்களை ஒன்று கேட்கிறேன். சர்வ சக்தனாகிய கடவுள் ஏன் இந்த உககத்தைப படைக்க வார்த்தைகளின் மூலமாக ஆறு நாட்கள் உழைத்தான்? எல்லாம் நன்றாயிருந்ததென்று ஏன் ஒவ்வொரு நாளும் கூறினான்? இன்று அவனைக் கூப்பிடுங்கள் சென்றகாலச் சரித்திரத்தைக் காட்டுங்கள். தற்கால நிலைமையை அவன் படிக்கும்படி செய்யுங்கள். “எல்லாம் நன்றாயிருக்கிறது” என்று சொல்லுகிற தைரியம் இன்று அவனுக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்.

ஏனிந்த மவுனம்?

காரிருள் செறிந்த காற்றோட்டமற்ற வெஞ்சிறைக் கூண்டுகளிலிருந்து குச்சுக்களிலும் குந்திக் குடியிருக்கும் கோடிக்கணக்கான மனிதப் பிராணிகளைச் சித்திரவதை செய்து, உண்டு உறிஞ்சி விழுங்கி ஏப்பமிடும், அகோரப் பசிக் களஞ்சியங்களிலிருந்து— கொடிய முதலாளிப் பூதங்கள், தங்களுடைய ரத்தத்தை இடையறாது