பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி, வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வளவோடு மாத்திரமல்லாமல், திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி, அந்தப்படியே அழைக்கும்படியாக தேச மகாஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு. இர்வின்பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

ஆனால், இப்போது வெகு சீக்கிரத்திலேயே அதே மக்களால், “காந்தீயம் வீழ்க,” “காங்கிரஸ் அழிக,” “காந்தி ஒழிக,” என்கிற கூச்சல்களும், திரு. காந்தியவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் செய்வது சகஜமாகிவிட்டன.

இவைகளையெல்லாம் பார்க்கும்போது அரசியல் விஷயமாய் நமது பொதுஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? அவர்களது கொள்கைதான் என்ன? என்பவைகளைக் கண்டுபிடிக்கவே முடியாமல் இருப்பதோடு, நம் மக்கள் யாருக்காவது ஏதாவது ஒரு கொள்கை விஷயமாய் நமது உண்டா என்றுகூடச் சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும் திரு. காந்தியவர்களின் உப்புச் சக்தியாக்கிரகக் கிளர்ச்சியின் ஆரம்பக் காலத்திலேயே “இக்கிளர்ச்சிமக்களுக்கோ, தேசத்திற்கோ, சிறிதும் பயன்படாது” என்றும், “பயன்படாமல் போவதோடல்லாமல், தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது” என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல், திரு காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யுங் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கை உடைய தேசத்தார்களும் “திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார்; சமதர்மக் கொள்கை-