பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தற்பெருமையா? அகங்காரமா?

நான் என்னை அறியாமலே எனது அபிப்பிராயங்களைப் பிறர்மீது சுமத்தி, அவைகளை அவர்கள் அங்கீகரித்தாக வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறேன் என்பதாக, எனது தோழர்களில் சிலர் என்னை உண்மையிலேயே கடுமையாகக் குற்றங் கூறுகிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உண்மைதான். நான் இதனை, மறுக்கவில்லை. இதை எனது அகம்பாவம் என்று கூறினாலும் கூறலாம். ஆனால், அப்படிப்பட்ட தற்பெருமையானது,. நம்மிடத்தில் மலிந்து கிடக்கும் பழக்கவழக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் அவற்றை தாக்குவதற்கும் இருந்து வருகிறது. ஆனால் அதில் சுயநலம் ஏதுமில்லை. ஒருக்கால் அப்படியிருந்தாலும் நியாயமான வாழ்க்கைக்குரிய கவுரவமாகுமேயன்றி. அகங்காரத்தோடு சேர்க்கத்தக்கதாகாது. வீண்பெருமை—அல்லது தெளிவாகக் கூறினால் அகங்காரமென்பது—தன்னைப்பற்றி தகுதியற்ற முறையில் மிதமிஞ்சிய கர்வம் பாராட்டிக் கொள்ளவதேயாகும். மேலே சொன்ன தகுதியற்ற தற்பெருமைதான் என்னை நாத்திகனாகும்படி தூண்டிற்றா? அன்றி, சர்வ ஜாக்கிரதையாக விஷயங்களைக் கவலை கொண்டு விரிவாக, ஆழமாக, நுணுக்கமாகப் பரிசீலனை செய்து, இராப்பகலாகச் சிந்தித்ததின் பலனாக நான் நாஸ்திகத்தை மேற்கொண்டு கட வுள் மறுப்புக்காரனாக ஆனேனா? என்கிற பிரச்சினையைப் பற்றியே முதலில் நான் இங்கு விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், முதன் முதலில் தற்புகழ்ச்சியும், அகங்காரமும் இரண்டும் வெவ்வேறான தன்மைகள் என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, தற்பெருமையோ அல்லது வீண்கவுரவமோ மனிதனுக்கு எவ்வாறு தெய்வ நம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடுமென்பதை, என்னால் கிஞ்சிற்றும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. நான் பெருந்தன்மைக்கு வேண்டிய யோக்கியதாம்சங்ககளின்றியோ அல்லது ஒரு பிரமுகனுக்கு இன்றியமையாத குணங்கள் இல்லாமலோ பொதுஜன செல்வாக்கைப்