பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - - I 02

கொள்வதாலோ என்னவோ மற்றவர்களது பெருமையை பற்றித் தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை: ஏன், பல அறிஞர்களுடைய பெயரைக்கூட நினைவிற் கொள்வதில்லை. -

இவரோ சிறு வயதுமுதலே யாருடன் பழகினாலும் அவர்களிடமுள்ள குணங்களைப் பார்த்துப் பாராட்டப் பழகினார். யாரை ஒரு முறை சந்தித்தாலும் அவரது பெயர், முகவரி முதலியவற்றைக் குறித்துக்கொண்டு அவர்களோடு கடிதத் தொடர்பு கொண்டு, அவர்களை நினைவிற் கொள்ளக் கூடிய அபார ஞாபகசக்தியைத் தம் மிடம் வளர்த்துக் கொண்டு வந்தார்.

இவர் ரீமத் ஐயருக்கு எழுதிய தம் முதல் கடிதத் திலேயே,

தண்தமிழ்த் தாயின் தொண்டினை வாழ்க்கையாக் கொண்ட...... நற்றவப் புலமையிர் என அவரைப் பலப்படியாக விளித்து

ஓரிரு திங்களின் முன்னர்ப் பங்கமில் சேந்தமங்கல

- ஜமீன்தார் இங்குறை கண்பர்களா தியோடும் காதலால்

தம்பால் போந்தவன் சிறியேன் எளியேன். சகநாதனெனும் புகனா மத்தன் தங்கள் இருசுடர் பங்கய அடிகளிற்,பற்பல - ‘. . . . - - வணக்கம்’ ’ எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருக்கு வணக்கம் கூறி, -

‘பெருமதியாள, தங்கள் கல்லாசியை விழைகிறேன், :பெரும் புலவ! சென்னைக்கு ஏகுதல் எங்கிலை 8. - யாயதோ?”

திருவான்மியூர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையத்தில் காண்க. -