பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் I 1.2

இப்படி 1927-ஆம் ஆண்டின் இறுதியில் ரீமத் ஐயருடைய திருவடியின் கீழிருந்து பாடம் கேட்கும் மாணவ வாழ்க்கை இவருக்குத் தொடங்கியது.

ஒரு நாள் நிகழ்ச்சிகள்

ஸ்ரீமத் ஐயர் விடியற்காலையில் நான்கு மணிக்கு விழித்துக்கொள்வார். வழக்கம்போலச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்த பின் ஜபம் செய்வார். அவருக்குச் சிவபக்தி அதிகம். ‘எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு’ என்பதுதான் அவருடைய தந்தையார் அவருக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அதை அவர் இறுதிவரை மறக்கவில்லை. நடக்கும்போதுகூடச் சிவநாமம் சொல்லிக்கொண்டிருப்பது அவரது வழக்கம், காலை 6 மணிவரை ஜபம் செய்வார். பின்பு தேவாரப் பாராயணம் செய்வார். பிறகு (உலகத்தார் பண்ணி வைத்த வழக்கம்)வெறுங் காப்பி ஆகாரம். அப்பொழுது மாணவர்கள் வந்துவிடுவார்கள். அந்தக் காப்பியில் சிறிது சிறிது உடன் இருப்பவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கா விட்டால் அவருக்கு இறங்காது. -

தமிழ்ப் பணி தொடங்கும். ஏட்டுச் சுவடிகளைப் பார்ப்பதோ, பிரதி செய்வதோ, பிரதி செய்ததை ஒப்பிட்டுப் பார்ப்பதோ, குறிப்புரை எழுதுவதோ இவற்றுள் ஏதேனும் ஒன்று நடைபெறும். நடுவில் சிறிது த ள ர் வு தோன்றினால் பாடஞ்சொல்லத் தொடங்குவார். -

பத்தரை அல்லது பதினொரு மணிக்குத் தமிழ்ச் சுவடிக் குவியலிலிருந்து எழுவார்.அப்புறம்தான் நீராடச் செல்வார். நியமமாகச் சிவபூஜை, ஜபம் முதலியன செய்தபின் உணவு கொள்வார். தமிழ் நூல்களின் சுவையை அநுபவிப்பது போலவே உணவிலும் சுவை யறிந்து உண்பார். உண்ட பிறகு இளைப்பாறுவார்; சிறிது நேரம் கண்ணயர்வார்.