பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் I 8

அன்று அறிந்த விஷயங்கள் -

இவருக்குப் பாடம் சொல் லி வரும்போது ஐயரவர்கள் தமக்குநினைவுவரும் அரியகருத்துக்களை நடு நடுவே சொல்வது உண்டு. இவரும் அன்றாட ம் தம் நாட்குறிப்பில், இன்று அறிந்த விஷயங்கள் எனத் தலைப்பிட்டு அவற்றைக் குறித்துக்கொண்டு வந்தார்.

பங்களுரிலிருந்து திரும்பி வந்தபின் ரீமத் ஐயர் இவருக்குச் சில அறிவுரைகள் வழங்கினார்:

ஒரு கைரேகை நிபுணர் கிரேக்கநாட்டில் இருந்தார். ஒருவருடைய கைரேகையையும், முகக் குறிப்பையும் அவர் பார்த்தால் போதும். அந்த ரேகைக்குரியவர். இன்ன குணங்கள் உடையவராக இருப்பார் என்று. சொல்லிவிடுவார்.

“தம் சீடர்கள் புடைசூழ உட்கார்ந்து பேசிக்கொண். டிருந்த கிரேக்க நாட்டு மாமுனி சாக்ரடீஸின் கையைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டது. சாக்ரடீஸ், சிறந்த பகுத்தறிவாளர்; தத்துவஞானி.

அவரது கைரேகையைப் பார்த்தவுடன், சாக்ரடீஸ் பொய் பேசுபவராகவும், கொலை பாதகராகவும், வஞ்சகம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்’ என நினைப்பதற்குரிய குறிகளைக் கண்டவுடன் அவரது மனம் குழம்பியது. ※

உலகில் சிறந்த மெய்யறிவாளராகிய சாக்ரடீஸ் அவ்வாறு நினைத்தற்குரியவர் அல்லரே என்று கவன்று, இம்முரண்பாட்டினால் ஒன்று, நீவிர் மறைந்தொழுதல் வேண்டும். அன்றெனின் சாத் தி ர ம் பொய்யாதல் வேண்டும்’ என்றாராம். :

“அதனைக் கேட்ட பெரியார் சாக்ரடீஸ், “நான்

கொலைத் தொழில் முதலியன உள்ளவனே: சாத்திரமும் பொய்யல்ல” என்றாராம். - . . . . .”.