பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 138

ஸ்ரீமத் ஐயரின் கடுமையான உழைப்பும், அளவிட்டுச் சொல்ல முடியாத பொறுமையும் இவருக்கு வழிகாட்டி யாக அமைய நேர்ந்ததும் நல்ல வாய்ப்புத் தானே?

ஐ ய ர வ ர் க ள் ஒரு பாடலில் உள்ள ஒரு சொல்லுக்குப் .ெ பா ரு ள் விளங்கவில்லையென்றால் அதனை அறியும் வரையில் திருப்பித் திருப்பிப் படித்துச் சிந்திப்பதை .ெ பா று ைம .ே யா டு இருந்து இவர் கவனித்தார். புதிய அரிய கருத்தொன்று புலப்பட்டு விட்டால் ஐயர் தம்முடைய தோளைத் தாமே மகிழ்ச்சியில் தட்டிக்கொண்டு காலை அசைப்பதைக் கண்டு இவரும் மகிழ்ந்தார். .

ஐ ய | ர் க ளி ன் பொறுமை எல்லையற்றதாக இருப்பதை அறிந்து இவரும் அதனையே மேற்கொள்ளத் தொடங்கினார். காலம் ேபா வ ைத உணராமல், ஐயரவர்கள் சொல்வனவற்றை எழுதிக்கொண்டே இருப்பதன்மூலம் பொறுமை தானாகவே வந்து இவரிடம் குடிகொண்டுவிட்டது: ஆசானின் ஆசிரியப்பிரானைப்பற்றிய குறிப்புகள்

ஐயரவர்களின் குமாரர் உயர்நீதி மன்றத்தில் வேலையில் இருந்ததால் அவர் காலையில் அலுவலகம் போனால் மாலையில்தான் திரும்பி வருவார். அந்த நேரத்தில் இவர் அநேகமாக எப்போதும் ஐயருடன் இருந்து வந்தார். -

ஐயரவர்களுக்குத் தம்முடைய ஆசிரியர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்

சரித்திரத்தை எழுதி முடித்துவிட வேண்டுமென்ற மன

உளைச்சல் இருந்தது.

இதற்காக அவர் கடந்த நாற்பத்தைந்து ஆண்டு களாகப் பிள்ளையவர்களைப்பற்றித் திரட்டிவைத்திருந்த குறிப்புகள் ஒரு பீரோ நிறைய இருந்தன; பல பேர் x . . சொன்ன தகவல்கள், கடிதங்கள் கட்டுக்கட்டாக

இருந்தன. . -