பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 5

‘சீவகசிந்தாமணி’ அச்சாகி வந்தது. ஐயரவர்கள் அதன் இறுதிப் பகுதிகளின் ப்ரூஃப் பைத் திருத்திக் கொடுத்த அன்று மிக்க மனநிறைவு கொண்டார். இது காறும் வந்திராத சோர்வும் தூக்கமும் அவரை அழுத்தின; அச்சகத்திலேயே, இருந்த இடத்தில் அப்படியே படுத்து உறங்கிவிட்டார்.

தூங்கி விழித்தபோது ஐயரவர்களைப் பார்க்க முன்பே வந்து காத்திருந்த ஒருவர், “இந்தாருங்கள், பத்துப்பாட்டு’ என முழுமையான ஒர் ஏட்டுச்சுவடியை ஐயரவர்களிடம் அளித்தார்.

தமிழ்த் தாய் அவர் மூலமாக, ‘துரங்காதே, எழுந்து என்னைப் பார்’ என்று சொன்னாற்போல ஐயரவர் களுக்கு இருந்ததாம்.

“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழைமுகமாக மீட்டும் அணிந்துகொண்டாய் உன் மற்ற ஆபரணங் களை நான் காணவும், அவற்றைத் துலக்கி உனக்கு. அணிவிக்கவும் நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும்: என ஐயரவர்கள் தமிழ்த்தாயை வேண்டிக்கொண்டாராம்

அன்றுமுதல் பத்துப்பாட்டில் முதலாவதாக உள்ள * : “திரு முருகாற்றுப்படை'யைப் படிக்கலானார், .

பத்துப்பாட்டைப் பதிப்பிக்க, மூலத்தையும் உரை யையும் பிரித்து எப்படி எழுதவேண்டுமோ அப்படி எழுதினார். அப்போது ஐயரவர்களுக்கு மிகவும் உதவி யாக உடன் இருந்தவர் திருமானுணர் கிருஷ்ணையர் என்பவர். -

“திருமுருகாற்றுப்படை பதிப்பிப்பதற்குரிய கற்சகுனம்

ஒரு நாள் காலையில் ‘திருமுருகாற்றுப்படை"யை அவர்கள் எழுதி முடித்தார்கள் அந்தச் சமயம்-வீதியில்