பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 160

அந்தப் பேராசிரியர் வித்துவான் தேர்வில் தேறியவர். தமிழாசிரியராகவும், பணியாற்றி வந்தவர். அவருக்குப் பாடம் சொல்லும்போது ஐயரவர்கள் சங்க இலக்கியத் தில் பத்துப்பாட்டையோ, நற்றிணையையோ, குறுந் தொகையையோ பாடம் சொல்லக்கூடும். நாமும் அப்போது சங்க இலக்கியத்தைப் பாடம் கேட்கலாம்” என்கிற நைப்பாசை இவருக்கும் எழுந்தது.

அந்தப் பேராசிரியரும், நமக்குப் பாடம் சொல்வது என்றால் ஐயரவர்கள் தாம் அலைந்து தேடி ஆராய்ந்து பதிப்பித்த சங்க நூல்களைத்தான் பாடம் சொல்வார். அவரிடம் பாடம் கேட்டால் ஐயரவர்களிடமே சங்க நூல்களைப் பாடம் கேட்டவன் என்று சொல்லிக் கொள்ளலாம்’ என நினைந்து வந்தாரோ, என்னவோ?

‘திருவரங்கத்து அந்தாதி பாடம் கேட்டது

ஐயரவர்கள் அப்போது “திருவரங்கத்து அந்தாதி'யை இவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அதையே அன்று பேராசிரியரும் இவர்களுடன் சேர்ந்து பாடம் கேட்டார். பேராசிரியர் போகும்போதுஅவரிடம், “நாளை நீங்கள் அஷ்டப்பிரபந்தம் இருந்தால் எடுத்து வாருங்கள். அதை உங்களுக்குப் பாடம் சொல்கிறேன்’ என ஐயரவர்கள் சொன்னார். “சரி’ எனச் சொல்லிச் சென்ற அந்தப் பேராசிரியர் அதற்குப் பிறகு பாடம் கேட்க வரவே இல்லை! - - -

இளமை மிடுக்கோடு சங்க இலக்கியம் பாடம் கேட்க ஆசைப்பட்ட இவருக்குப் பெரிய ஏமாற்றம்.

‘சங்க நூல்களை நன்கு ஆராய்ந்து பதிப்பித்துச் சுவைத்த பி ன் ன ர் ஐயரவர்கள் புராணங்கிளையும் பிரபந்தங்களையும் எவ்வாறு ரசிக்க முடிகிறது?’ என்று இவருக்குத் தோன்றியது. o

‘தமிழ் வித்துவான், தமிழ் எம்.ஏ.படித்தவர்களால் கூட, ஒரு பாடலைத் தந்து பொருள் சொல் என்றால்,