பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 நாம் அறிந்த கி.வா.ஜ.

அன்பர் கி.வா.ஜ. வையும் தம் குடும்பத்தில் ஒருவ ராகவே பாவிக்கத் தொடங்கிவிட்ட ஐயரவர்கள் இந்த விவரங்களை இவருக்குத் தம் கடிதத்தில் எழுதினார்.

ஆசானின் உடம்பு சுகவீனம்பற்றிய கடிதம் கண்ட வடன் இவரது மனம் துடித்தது.

தம் உடம்பு பூரண குணமாகிவிட்டது என்பதைத் தெரிவித்ததோடு ஐயரவர்களின் உடல் நலம்பற்றி உ ட ேன தெரிவிக்கும்படி அ வ ரு க் கு க் கடிதம் எழுதினார். w .ஆசானின் அன்புக் குமாரர் செய்து கொடுத்த வசதி

ஐயரவர்களின் குமாரரிடமிருந்து 7-8-1928-ஆம் தேதியிடப்பெற்ற கடிதம் ஒன்று இவருக்கு வந்தது:

“இந்த மாதம் 3-ஆம் தேதி ரீமத் ஐயரவர்களுக்கு அனுப்பிய கார்டு வந்தது. அவர்களுடைய தேகஸ்திதி முற்றும் அநுகூலமாயிற்றென்றே சொல்ல லா ம் 9 ஆயினும் சிறிது அசெளகரியம் இன்னும் இருந்து வருகிறது. தேகஸ்திதி குணமாய்விட்டது: சந்தோஷம் அடைந்தோம்: ‘. . ;

“ஆகாரம் முதலியவற்றுக்கு இங்கே பார்த்துக் கொள்ளலாமென்றும், அங்கே குடும்பத்திற்கு வேண்டிய மட்டும் ஏற்பாடு செய்துவிட்டு வரலாமென்றும், ஒரு நல்ல தினம் பார்த்துக்கொண்டு இங்கே புறப்பட்டு வந்து விடலாமென்றும் ஸ்ரீமத் ஐயரவர்கள் தெரிவிக்கச்

சொன்னார்கள் .

அதைப் பார்த்தவுடன் இவருடைய தாயார் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமன்று -

‘முருகனே உன் சாப்பாட்டுக்கு ஐயரவர்கள்மூலம் அருள் செய்துவிட்டான். எங்களைப்பற்றி நீ கவலைப் படாதே! நீ படித்து முன்னுக்கு வருவதைப் பார். உடனே சென்னைக்குக் கிளம்பு என்று அவசரப்படுத்தினார்.