பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 186

பாடம் கேட்டிருக்கிறானா?’ என்று தம்பிரான் கேட்டார்.

கேட்டிருக்கிறான்.” . . . .

இன்னும் ஒரு முறை எனக்காக அவனுக்குச் சொல்லுங்கள். அவன் வந்து எனக்குச் சொல்லிவிடுவான். அதனால் தங்களுக்கும் அதிகச்சிரமம் இல்லை; அவனுக்கும் பழக்கம் ஏற்படும்’ என்று காசிவாசி சாமிநாதத் தம்பிரான் சொன்னார். - -

“அப்படியா? சந்தோஷம்! ஜகந்நாதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைப்பதில் எனக்கு அளவில்லாத திருப்தி என்றார் ரீமத் ஐயர். -

இன்னும் ஒ | ஆ ைச: பி ர ப ந் த த் ைத த் தாங்கள் குறிப்புரையுடன் பதிப்பிக்க வேண்டும்’ என்று ஐயரவர்களிடம் பனசை இளவல் கேட்டுக்கொண்டார்.

இது விஷயத்தில் நீர்தாம் அவருக்கும் உதவி செய்ய வேண்டும்’ என்று இவரிடமும் தெரிவித்தார்.

ஐயர் திருப்பனந்தாள் வரும்போது நீங்களும் அவருடன் வரவேண்டும்’ என இவருக்கு அழைப்பு விடுத்தார், தம்பிரான் சுவாமிகள்.

X - X K.

மோகனூலிருந்து இவர் வந்து ஐந்தாறு மாதங்கள் ஆகிவிட்டன. நண்பர்கள் அவ்வப்போது அவ்விடத்திய செய்திகளை எழுதி வந்தார்கள். ----

மோகனூர்க் கோபாலகிருஷ்ண செட்டியார் கிருத் திகைக்குக் கிருத்திகை காந்தமலை முருகன் விபூதிப் பிரசாதம் அனுப்பிவைப்பார்.

இவருக்குத் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க ஒருவர் திருவாரூரிலிருந்து அடிக்கடி இவருடைய தந்தையைப் போய்ப் பார்த்து வந்தார். அதுபற்றித் தந்தையார் எழுதிய கடிதத்திற்குக்கூட, கல்யாணப் பேச்சை இப்போது எடுக்காதீர்கள்; எனக்குத் திருமணம்