பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 196

எனக்குச் சொன்னதுண்டு, அது என்னால் முடியாது. என் மூச்சு உள்ளவரை தமிழ்ப்பணி ஒன்றில்தான் என்னால் ஈடுபட முடியும். தமிழ் ஆராய்ச்சிப் பணி ஒன்றுதான் எனக்கு உயர்ந்த மோட்ச சாதனம்’ என மிகுந்த உணர்ச்சியோடு தமிழ்த் தாயின் தவப் புதல்வர் தம் உள்ளத்தைத் திறந்து காட்டினார்.

துறவறம் பூண வேண்டும் என்றிருந்த அன்பர் கி.வா.ஜ., அவர்களின் பழைய பைத்தியம் படீரெனத் தெளிந்தது.

அடுத்து அன்று, :படிக்க வேண்டும்’ என ஐயரவர்கள் சொல்வதற்குள் இவர், தாம் பாடம் கேட்டுவந்த நூலைப் படிக்கத் தொடங்கினார்.

X X X. தமிழ்த் தொண்டா, தேசத் தொண்டா? -

இவருடைய நண்பர் செல்லமையரிடமிருந்து இவருக்கு ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. அவர் அப்போது மேட்டுப் பாளையம் மகாஜன உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவருக்குத் திருமணமாகிவிட்டது. தேசத் தொண்டர்கள் கள்ளுக்கடைகளின்முன் தமிழ் நாட்டில் ஆங்காங்கு மறியல் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலம் அது. தாமும், தம் மனைவி சீதாவும் மேட்டுப் பாளையம் கள்ளுக்கடை முன் மறியல் போராட்டத்தில்

ஈடுபட்டு வருவதாக அவர் இவருக்கு எழுதியிருந்தார். இவர் உடனே அவருக்குக் கடிதம் எழுதினார்: ‘பலரையும்போல நீங்களும் இந்தக் காரியத்தில் சடுபட்டிருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. என்றாலும், தமக்கென்று ஒரு லட்சியம் உடையவர்கள் அந்த லட்சியத்திற்காகவே உழைக்க வேண்டும். நாமோ தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுமென்ற நோக்கம் உடையவர்கள். தேசபக்தி சிறந்ததுதான்; எனினும் அதை வளர்க்க நாட்டில் பல பேர் இருக்கிறார்கள். தமிழ்ப் பக்தி