பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 28:

முன்பு அங்கே பூவைச் சிக்கனமாகக் கொடுத்த பெண்ணின் உறவினர் . வந்தார்.

அவரைக் கண்டவுடன் ஐயரவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. ஐயர்தாமே முன்பு ராமசந்திரையரை வரச் சொல்லியிருந்தார்?

ஐயரவர்களின் பேரரைப் பார்த்தவுடன், என்ன, பையன், ஒரே இளைப்பாக இருக்கிறானே?: என்றார் வந்தவர். -

டைஃபாய்டு காய்ச்சலினால் இப்படி ஆகிவிட்டான். கொஞ்சம் உடம்பு தேறட்டும். திருமணத்தைச் சில மாதங்கள் தள்ளியே வைத்துக்கொள்ளலாம்’ என ஐயரவர்களின் வீட்டார் சொன்னார்கள். வந்தவருக்கும். திருப்தியாக இருந்தது.

வந்தவரைத் தம்முடைய புத்தகங்கள் இருக்கும். அறைக்கு அழைத்துச் சென்று காட்டினார், ஐயரவர்கள். மேலே எல்லாம் ஏட்டுச் சுவடிகள் அடுக்கப் பட்டிருந்தன. சுவர்களின் பக்கத்தில் எல்லாம் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. நிலைச் சட்டங்களில் பல மூட்டைகள் காணப்பட்டன, -

அருகில் இருந்த இவரிடம், இந்த மூட்டைகளில் என்ன இருக்கின்றன?’ என்று கேட்டார் ராமசந்திரையர். “எல்லாம் கையெழுத்துப் பிரதிகள்; தமிழுலகம் இன்னும் காணாத நூல்கள்’ என இவர் சொன்னார். தாம் பதிப்பித்திருந்த சில நூல்களையும் அவரிடம் காட்டினார், ஐயரவர்கள். பின்னர் மூவரும் ஆராய்ச்சி செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்துகொண்டார்கள்.

இந்தப் பிள்ளை எனக்கு மிக உதவியாக இருக்கிறான். என்னிடம் தமிழ் படித்து வருசிறான். இவனை உதவிக்கு வைத்துக்கொண்டு இன்னும் சிறப்பான பல நூல்களைப் பதிப்பித்தாக வேண்டும்’ என ஐயரவர்கள் சொன்னார். அருமையான நூல்கள் பலவற்றையுந்தான் நீங்கள் வெளியிட்டு விட்டிர்களே! இன்னுமா சிறப்பாள நூல்கள்