பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 205

நேர்ந்தால் என்ன செய்வது என்ற கவலை சில சமயம் உண்டாகிறது’ எனச் சொல்லி ஐயரவர்கள் சிறிது மெளனமாக இருந்தார்.

“குழந்தை"களுக்காக ஆசான்பட்ட ஏக்கம் :

அவரது உள்ளம் எதையோ நினைந்து மறுகியது, இவர் அவரது முகத்தைப் பார்த்தவுடன், என்ன அப்படிப் பார்க்கிறீர்? நான் சாவதற்கு அஞ்சுகிறேனோ என்று பார்க்கிறீர்களா? சாவைப்பற்றி நான் துளிக்கூடக் கவலைப்படவில்லை. இந்தக் குழந்தைகளை விட்டுப் போக வேண்டுமேயென்றுதான் கவலைப்படுகிறேன்’ என்றார்.

ஐயரவர்களுக்கு ஒரே ஒரு புதல்வர்தாம். அவரும் தம் தகப்பனாருக்குக் குடும்பக் கவலை ஏதும் கொடுக்காமல், தாமே எல்லாவற்றையும் முறையாகக் கவனித்துக் கொண்டு வந்தார்.

எனவே, குழந்தைகள்’ என ஐயர் குறிப்பிட்டது, அவர் சேகரித்து வைத்திருந்த தமிழ் நூல்களே ஆகும். அவர் மேலும் சொன்னார்: “அப்படியே ஒரு நாள் நான் இறந்து போனாலும் தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்யத் தமிழ்நாட்டில் வந்துதான் பிறப்பேன். என் கவலை யெல்லாம் அடுத்த பிறப்பெடுத்து வரும்போது என் இந்தப் புத்தகங்கள், சுவடிகள், நானே எழுதி வைத்துள்ள குறிப்புகள் எனக்குக் கிடைக்குமா என்பதுதான். இவர்கள் தான் அப்போது என்னை உள்ளே விடுவார்களா?” எனத்

தம் வீட்டாரைச் சுட்டி நகைச்சுவை ததும்பக் கூறினார்.

காரணம், ஐயரவர்களுடைய கை யி ல் பட்ட ஒவ்வொன்றிலும், ஒ வ் .ெ வ | ரு ப. க்க த் தி லும் அடையாளங்கள் இருக்கும்; குறிப்புகள் இருக்கும். ஒகு புத்தகத்தை அவர் நூறு முறை படித்துக் குறிப்பு எடுத்திருப்பார். நூற்றோராம் முறை படிக்கும்போது, அதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துக் குறிப்பு