பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 21 &

சொல்லுவான். கவலைப்படாதீர்கள்!’ என்று சொல்வி அவரை அனுப்பி வைத்தார். -

இவர் என்னவோ சற்றுத் தயங்கினார். ஆசான் சொன்னார்: “என் குருநாதரான பிள்ளையவர்களுக்குப் பாடம் சொல்லுவதில் இயல்பாகவே விருப்பம் அதிகம். அவரது கல்வி வளர்ச்சிக்கும், கவித்துவத்துக்கும் காரணம் அவர் பாடம் சொல்வி வந்ததேயாகும். - அந்தக் கவிஞர்கோமானிடம் படித்த பூரீலயூரீ நவச்சிவாய தேசிகர், ஒரு முறை பாடம் சொல்வது ஆயிரம் தரம் படிப்பதற்குச் சமானம்’ என்று சொல்லிக் கொண்டு இடைவிடாமல் பாடம் சொல்வார்.

“என்னைக் கும்பகோணம் கல்லூரிக்குத் தமிழ்ப் பண்டித பதவிக்குப் அமர்த்திய தியாகராச செட்டியார், பிள்ளையவர்களைப் பார்த்து, நீங்கள் இடைவிடாமல் பாடம் சொல்லுவதாகப் பேர் வைத்துக்கொண்டு நன்றாகப் படித்து வருகிறீர்கள்’ எனச் சொன்னதை நானே கேட்டதுண்டு. -

கவலைப்படாமல் போய்ப் பாடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் உமது ஞாபக சக்தியும், கவிதா சக்தியும் நன்றாக வளரும்’ என ஆசீர்வதித்து இவருக்கு உற்சாகமூட்டினார். - - -

இவர் பாடம் சொல்லுவதுபற்றிக் கவலைப்பட வில்லை. இவர் கதர் நாலு முழ வேட்டிதாள் கட்டுவார். உயர்நிலைப் பள்ளிக்கு ஆசிரியராகப் போக வேண்டு மானால் மூலக்கச்சம் கட்டிக்கொண்டு போக வேண்டுமே யெனத்தான் கவலைப்பட்டார். -

முதல் நாள், வகுப்புக்குள் இவர் போகும்போதே, “ஏய் ஆசிரியரும் பையன்தாண்டா’ என்று ஒரு பையன் சொல்லிச் சிரித்தான். அதைக் காதில் வாங்காமல் இவர் பாடம் சொல்லத் தொடங்கினார். .

தடுவில் ஒகு நாள் கரும்பலகையில் எழுதிக் காட்டத் திரும்பியபோது இவர் கவலைப்பட்டபடியே ஆகிவிட்டது.