பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 2:12

சுவாமிகளும் இவரைப்பற்றிச் .ெ சா ன் னார். மிக்க தமிழார்வம் உடையவராமே! தங்களிடமிருந்தும் நிரம்பக் கற்றுக்கொண்டிருக்கக் கூடும்’ என முன்பே அறிந்தவர் போல் இவருடன் பழகலானார் அதிபர்.

“நல்ல சாகித்தியத் திறமை உடையவராகவும் இருக் கிறார். எந்தக் கருத்தைச் சொன்னாலும் உடனே சாகித்தியம் செய்துவிடுவார்’ என ஐயரவர்கள் இவரைப் பற்றி மேலும் சொன்னார்.

உடனே இளவல் சாமிநாதத் தம்பிரான், உசியார் செய்த செயல்’ என ஈற்றடி கொடுத்து இவரைப் பாடச் சொன்னார். இவர் பாடிய பாடலைக் கேட்டவுடன் தம்பிரான்மாருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. மேலும் உரையாடியபோது அவர்கள் யாவரும் மகிழும்படி இவர் சுவைபடப் பேசினார்.

X X Ҳ

ஒரு மனிதரைப் பார்க்கப்போகும்போது நாம் இருந்ததைவிடத் திரும்பி வரும்போது அறிவாற்றலிலும், இதயப் பண்பிலும் நம்மை அறியாமலே நாம் ஒரு படி - உயர்ந்துவிட்டிருந்தோமானால் அந்த மனிதரைப் பெரிய மனிதர் எனலாம், அத்தகைய அபூர்வமான ஒருவர் கி. வா. ஜ. என்பதாகக் கல்கி ஆசிரியர் கி. ராஜேந் திரன் எழுதினார்.* -

X. X Χ

இந்த உண்மையை இவரோடு பழகியவர்கள் அனை வருமே உணர்வார்கள், ரசமாகப் பேசுவது என்பதே.ஒரு கலை; மேடையில் மட்டுமல்லாமல் பலருடன் உரையாடும் போதும் கேட்போர் இன்புறும்படியாகப் பேசுவது எல்லோருக்கும் வராது. பொழுது போவதே தெரியாமல் மணிக்கணக்கில் வம்பளப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த

  • கல்கி ட20 - 11 . 1988,