பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 - - நாம் அறிந்த கி.வா.ஜ.

கவிஞர் கோமான் பிள்ளையவர்கள் தம் இளமை யிலேயே சுவையான பல தனிப் பாடல்களைப் பாடியிருக். கிறார். அற்புதமான பல அந்தாதி நூல்களை இயற்றிப் பலரது பாரட்டுதலையும் பெற்றிருக்கிறார். என்றாலும், அந்தப் புலவர்சிகாமணியின் உள்ளம் சென்னைக்கு வந்து பல தமிழறிஞர்களிடம் பாடம் கேட்க விழைந்தது. சென்னைக்கு வந்து த ங் கி ப் படிக் க அவரிடம். பண வசதி இல்லை. - ... “ மேலும் ஆசான் கண்ட பழைய அநுபவங்கள் பற்றி

அந்தச் சமயம் அவரை மிகவும் ஆதரித்து வந்த செல்வர் லட்சுமணப் பிள்ளை என்பவரது குடும்ப வழக்கு ஒன்று சென்னையில் நடந்தது. “எனக்காக உங்களால் சென்னைக்குப் போய்வர முடியுமா?’ என அவர் பிள்ளை யவர்களிடம் கேட்டார். -

இதுதான் சந்தர்ப்பம் என்பதாகப் பிள்ளையவர்களும், ::நானே சென்னை போகிறேன். அங்கே உங்கள் காரியத்தை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்வேன். அதோடு நானும் சென்னையிலுள்ள தமிழறிஞர்கள் சிலரிடம் பழகிப் பாடம் கேட்டுப் பயனட்ைவேன்’ என வெளிப்படையாகச் சொல்லிச் சென்னை வந்தார். - -- அப்போது புலவர் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை மயிலாப்பூரில் இருந்தார். அவரது வீட்டிற்குப் போகும் போது கபாலீசுவரர் கோவிலின் வழியாகத்தான் செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் செய்து கொள்வதில் கவிஞர் கோமானுக்கு விருப்பம் அதிகம். திருவாசகம், திருச் சிற்றம்பலக்கோவை போன்ற சைவ நூல்களைத்தான் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையவர்களிடம் பாடம் தேட்டார். - - ... “ . என்றாலும், பாடம் கேட்கப் போகும்போது கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய, துழைந்தால் தேரமாகிவிடுமே என்கிற கடிஜலயில் சந்நிதித்த் தேரே.