பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 230

விதியில் நின்றபடியே இறைவனை வணங்கிவிட்டுப்

போவாராம். - - - -

இப்படி ஒருபோது இவரிடம் பாடம் கேட்பது: மற்றொரு போது காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரின் வீடு சென்று அவரிடம் கந்தபுராணம், ! .ெ ப. ரி ய பு ர | ண ம்’ போன்ற சைவ நூல்கள், பிரபந்தங்களைப் பாடம் கேட்பது, இரவு திருவேங்கடாசல முதலியாரிடம் வைணவக் காப்பியங்களைப் பாடம் கேட்பது என்று சென்னையில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளையும் அவரவர்களுக்கு வேண்டிய காரியங்களையும் செய்து .ெ கா டு த் து த் தாமும் பயனடைந்தார் பிள்ளையவர்கள்.

காரணம், காலத்தின் அருமையை உணர்ந்தவர் பிள்ளைவர்கள். அரிதின் வாய்க்கும் சந்தர்ப்பத்தை தழுவ விடுதல் கூடாது என்ற சித்தமுடையவர். இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை அவரே இடைவிடாமல் .பயின்று வந்தார். ஆயினும், ஒவ்வொரு நூலையும், உரையையும் பரம்பரைக் கேள்வியினால் அறிந்து கொண்டவர்களிடத்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உடையவராகவே இருந்தார்.

கீழ்வேளுர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்க விரும்பியபோது, அவருடன் இருந்தவர் சொன்னாராம்:

பாடம் கேட்டாலும், கேட்காவிட்டாலும் குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்குக் குறையாமல் மாதம் ரூ. 20 வீதம் அவரது செலவிற்குக் கொடுக்க வேண்டும். அதைத் தவிர முடிவில் தக்க சம்ம்ானம் செய்ய வேண்டும். அவரது கைப்புத்தகத்தில் மாணவனாக இருந்து பாடம் கேட்டேன்’ என்பதற்குப் பெயரிட்டுத் தர வேண்டும்.” அப்படியே செய்வதாகப் பிள்ளையவர்கள் ஒப்புக் கொண்டார். -

கவிஞர் சிகாமணி பிள்ளையவர்களிடம், அப்போது பணம் இல்லை. காதில் கடுக்கன் ஜோடிதான் இருந்தது.