பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 தாம் அறிந்த கி.வா.ஜ.

களும், பல இசை - ஓவியக்கலைஞர்களும் இவருடைய அன்பர்களாக இருந்தார்கள். -

நாராயணசாமி ஐயர் நல்ல சுந்தர வடிவம்ஆஜாதுபாஹ- எப்பொழுதும் புன்னகை பூத்த முகம்கல்வி, செல்வம் எல்லாவற்றுக்கும் மேலாகப் பணிவும் அடக்கமுமான இயல்பு-போதாதா? வாழ்க்கையில் வெற்றிகள் பல பெறுவதற்கு அவருக்கு வேறு என்ன வேண்டும்?

அவர் எதையும் திர ஆலோசித்தே செயல்படுவார். அறிவு படைத்தவர்களிலும், சிறந்தவர்களைத் தேடிப் பிடித்து நட்புக்கொண்டு நல்ல பல காரியங்கனை இயற்று வதிலும் வல்லவர் அவர். இடையில் எத்தகைய இடை ஆறுகள் நேரிடினும் கலங்கமாட்டார். முன்வைத்த காலைப் பின்வைக்காத நெஞ்சுறுதி படைத்தவர். -

  • மதராஸ் லா ஜர்னல்” என்ற சட்டப் பத்திரிகையின் உரிமையை 1914 - இல் வாங்கிக்கொண்டு, அதனை நடத்தி வந்தார். அப்பத்திரிகைக்கு 1923 - இல் ஓர் அச்சகத்தையும் வாங்கினார்.

தம்கீழ்ப் பணிபுரிபவர்களிடம், தாம் முதலாளி என்ற அதிகாரத்தை அவர் காட்டியதில்லை. ஒருவரை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டால் பிறகு அநாவசியமாக அதில் தலையிடமாட்டார். -

தம்முடைய சொந்தக் காரியம் போன்ற மனோபாவத் தோடு தம்மிடம் பணிபுரிபவர்களைச் செயல்பட வைக்கும் ஆற்றல் அவரிடம் மிகுதியாக இருந்தது. .

அதனால் லா ஜர்னல்” பத்திரிகையைச் சட்ட உலகில், தன்னிகரற்று விளங்கும்படியாகச் செய்தார். வழக்கறிஞர் களுக்கு இன்றியாமையாத பல சட்ட நூல்களை விரிவுரை களுடன் வெளியிட்டார். அவருடைய சட்டத் தொகுப்புகள் (Law Digests) அவருக்கு உலகில் பெரும் புகழைத் தேடித் தந்தன. . х

X赛 X *