பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 29 Go

கலைகள்’ என்னும் கட்டுரை அந்த வாழ்த்துப் பாடலை. அடுத்துச் சிறப்பாக அமைந்தது.

X X X

இவருடைய நண்பர் ச. கு. கணபதி ஐயர் திருப்பத் தூரிலிருந்து தம் குடும்பத்துடன் 2 - 9 - 1931-இல் சென்னைப் புரசைப்பாக்கம் வந்துவிட்டார். அங்கு ஜாகையும் பார்த்துக்கொண்டார். புர ைச ப் பா க் க ம் இ. எம். எல். எஃப். உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழ் ஆசிரியர் வேலை அவருக்குக் கிடைத்தது. -

கணபதி ஐயர் சென்னை வந்தது தெரிந்தவுடன், அன்பர் கி.வா.ஜ., அவர்களின் பால்ய நண்பர் செல்லமை வருக்கும் மேட்டுப்பாளையத்தில் இருப்புக் கொள்ள வில்லை. இவரது ஒவ்வொரு கடிதத்தையும் பார்க்கும் போது, தாமும் சென்னைக்கே வந்துவிட வேண்டும். என்கிற அவா அவருக்கு எழும்.

கணபதி ஐயர் வந்தவுடன் செல்லமையரையும் சென்னைக்கு வந்துவிடும்படி இவர் எழுதவே, 1982 கோடைவிடுமுறையின்போது அவரும் இங்கே வந்தார்.

செல்லமையர், பி. ஏ., எல்.டி., படித்தவர். ஆதலால் பெரம்பூர் உயர்நிலைப்பள்ளியில் அவருக்குச் சிரமமின்றி ஆசிரியர் வேலையும் கிடைத்தது.

அதுமுதல், வந்த இருவரும் ஐயரவர்களின் பதிப்புப் பணியில் உதவி புரியத் தொடங்கினார்கள்.

>{ % - 巽

கலைமகள் அலுவலக வேலைநேரம் காலை பத்து மணிமுதல் மாலை ஐந்து மணியாக இருந்தது. பல நாள் பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணிக்கே அலுவலகத்தி லிருந்து கிளம்பி ஐயரவர்களின் வீட்டிற்கு வந்துவிடுவார், அன்பர் கி.வா. ஜ. அதுமுதல் இரவு பத்துமணி வரைக்கும் ஆசானுடன் இருந்து வேலை செய்வார். :