பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 நாம் அறிந்த கி.வா.ஜ.

ஆறு தொகுதிகளாகிக் காமகோடி கோசஸ்தானப் பிரசுரமாக உருப்பெற்று இன்றும் நிலவுகின்றன.

அன்றுமுதல் காஞ்சி கோமகோடி பீடாதிபதி ரீமத். சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் இவருக்கு ஏற்பட்ட பக்தி மேன்மேலும் பெருகி இவருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்டது.

“திருமுருகாற்றுப்படை'யில், “ என்(பு)எழுந்(து) இயங்கும் பாக்கையர் கண்பகல்

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தன்மையர் ’’ - என்பதாக முனியுங்கவர்களின் இயல்பு குறிப்பிடப்பெறு: கிறது. பெரியவரிடம் அத்தனை லட்சணங்களும் பொருந்தி இருக்கக் கண்டு அவரது சந்நிதானம் என்றால் இவர் மெய்சிலிர்த்து நிற்பார். அவரும் இவர்பால் காட்டிய அன்பு, கண்டோர் உள்ளத்தை நெகிழச் செய்யும். திருமுருகாற்றுப்படை அரசு’ வாகீச கலாநிதி ஆதல் : சென்னை தங்கசாலைத் தெரு சைவசமய பக்தஜன. சபையில் திருமுருகாற்றுப்படை பற்றி 1949 மார்ச் 16-ஆம் தேதி இவர் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து கந்தசாமி கோவில் மெத்தை மண்டபத்தில் வாரந்தோறும் ஒரு நாள் திருமுருகாற்றுப்படை"யைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று பல அன்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். . . .

அதன்பேரில் 1949 ஏப்ரல் 6-ஆம் நாள் அந்தத் தொடர் சொற்பொழிவை ஆரம்பித்துக்கொண்டார். அன்றுமுதல் தொடர்ந்து 32 வாரம் புதன்கிழமைதோறும் கந்தசாமி கோவில் மெத்தை மண்டபத்தில் திருமுரு காற்றுப்படை பற்றி விரிவுரையாற்றினார்.

1949 நவம்பர் 11-ஆம் தேதி மாலை 6.30 மணிக்குத் .திருமுருகாற்றுப்படை நிறைவு விழா நடைபெற்றது.