பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 - நாம் அறிந்த கி.வா.ஜ.

திருப்பனந்தாள் பூரீகாசி மடாலயத் தலைவர் பூரீல பூசி காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் அவர்கள் ஆண்டுதோறும் தனித்தமிழ் வித்துவான் தேர்வில் அனைவரையும் விட முதலாவதாகத் தேறியவர்களுக்கு வழங்கி வரும் ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசு, இவ்வருஷம் நம் கலைமகன் உதவி ஆசிரியர் பூரீமான் கி.வா. ஜகந்நாதையர் அவர்களுக்குக் கிடைத்ததுபற்றி நாம் மகிழ்ச்சி அடைகிறோம். கலை மகள் நண்பர்களும் மகிழ்வார்கள் என நம்புகிறோம். இத்தகைய பெரும் பரிசு தமிழ் படிக்கும் மாணவர்களுக்குச் சிறந்த உனக்கத்தை உண்டாக்கும்’ எனப் பனசைமடாதிபதி யாரின் செயலைப் பாராட்டி, அதன் ஆசிரியராக இருந்த டி. எஸ். ராமசந்திரையர் எழுதினார். “. .

அந்த ஆண்டு பரிசளிப்பு விழா 12.7.33-இல் திருச்சி நேஷனல் காலேஜில் நடைபெற்றது. பரிசு பெற இவர்’ திருச்சிக்குச் சென்றபோது, அந்தக் கல்லூரி மாணவர்

களின் விடுதியில் தங்கினார். - -

விழா அன்று ஐயரவர்கள் வந்தார். இவரைப்பற்றி அவர் விசாரித்தபோது, மாணவர்களின் விடுதியில் தங்கி யிருப்பதாக அக்கல்லூரி முதல்வராக இருந்த சாரநாத ஐயங்கார் சொன்னாராம். -

அவரை அங்கேயா தங்க வைத்தீர்கள்?’ என ஐயரவர்கள் கேட்டபோது கல்லூரி முதல்வருக்கு ஒன்றும் புரியவில்லை. - அசின்னப் பையன் பெரும் பரிசு பெற்றமை :

  • அவன் என்ன, சின்னப் பையன்! மாணவர்களோடு மாணவனாக விடுதியில் இருக்கிறான். அவனைப்பற்றிக் கவலை கொள்ள என்ன இருக்கிறது?’ என்கிற மாதிரி முதல்வர் பதில் சொன்னாராம். -

பரிசளிப்பு விழா வைபவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு பூரீமான் திவான் பகதூர் ஸர் டி. தேசிகா சாரியார் தலைமை வகித்தார். ஐயரவர்களும் வேறு பல