பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 343 ஊர்க் கோயில் கும்பாபிஷேகம் போன்ற திருவிழாக்களில் இவரும் கலந்து கொள்ளவேண்டி அழைப்பும் அனுப்புவார். இவரும் அங்கெல்லாம் சென்று இனிய கவியமுதமன்ன் விரிவுரை. புரிவார். ふ* ஏன், இவர் கடைசியாக நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் இவரைத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார்கள். தம் மு ை- ய தள்ளாமையையும். பொருட்படுத்தாமல் வாரியார் சுவாமிகள் இவரைப் பார்க்கத் தனியார் மருத்துவமனைக்கு வந்தார். -

இருவரும் ஒருவரையொருவர் கண்களினாலேயே தழுவிக்கொண்டனர். இவர் தம் கையைப் படுக்கையில் இருந்தபடியே உயர்த்தியபோது வாரியார் சுவாமிகள் அதைப் பற்றித் தொட்டு நீவிவிட்டார். தம் கழுத்தில் அணிந்திருந்த ருத்திராட்சமாலையைக் கழற்றி இவருடைய கையில் கொடுத்தார். அதனை வாங்கி இவர் தம் கண்ணில் ஒற்றிக்கொண்டார். வாரியார் சுவாமிகள் தம்மிடம் இருந்த திருநீற்றை எடுத்து, ஆண்டவனுக்குத் திருநீறு அணிவிப்பது போல அணிவிக்கிறேன்’ எனச் சொல்லிக் கொண்டே இவருக்குப் பூசிவிட்ட காட்சி அந்த இடத்தையே தெய்வசந்நிதானமாக ஆக்கியது. x

இப்படி இவர்கள் இரண்டு பேர்களுமே காந்தமலை, யான்மீது பல காலமாகப் பக்தி கொண்டவர்கள். . . .

22.4.57-இல் யாரோ ஒருவன் காந்தமலை முருகன் விக்கிரகத்தை உடைத்துவிட்டான் என்று வந்த செய்தி இவர்கள் இரண்டு பேர்களையுமே துடிதுடிக்க வைத்தது. உடனே அந்த மலைக் கோவிலில், திரும்பவும் முருகன் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்குச் செய்துவைக்க வாரியார் சுவாமிகள் செய்த ஏற்பாட்டில் இவரும் ஈடுபட்டு நல்ல படியாக அது நிறைவேறியது

இடையில் ஒரு நாள் காந்தமலை முருகனையே நின்ைந்து பாடி மகிழ்ந்து வரும் அந்த ஊர்க்காராகிய இவருக்கு, காந்தாலையான் திருவடியின்கீழ் 30.8-57-இல்