பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

易47 நாம் அறிந்த கி.வா.ஜ.

அதே சமயம் சென்னைப்பல்கலைக்கழகத்தார். இவரது விண்ணப்பத்தைப் பரிசீலித்து இவரை ஆராய்ச்சி மாணவராக ஏற்றுக்கொண்டனர்; ஐயரவர்களது தமிழ் ஆராய்ச்சிப் பணிக்கு உதவியாக இருந்துகொண்டு, அவரையே வழிகாட்டும் பேராசிரியராகவும் கொண்டு ஆராய்ச்சி செய்யவும், அதற்காக இவருக்கு மாத ஊதியம் ரூ. 75 வழங்கவும் இசைவு தெரிவித்தனர்.

X X X. “வளையாபதி'யைத் தேடி அலைந்த ஆசானுடன் :

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், . மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டல கேசி என்பவற்றுள் முதல் மூன்றையும் ஐயரவர்கள் வெண் யிட்டார். வ ைள யா ப தி யு ம், கு ண் ட ல .ே க சி யும் கிடைக்கவில்லை.

‘நீலகேசி என்ற ஜைன நூலில் குண்டலகேசியைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அது பெளத்த நூல் என்றும், குண்டலகேசி என்பவள் புத்த பிட்சுணியாகி வாதம் செய்தவள் என்றும் தெரிகிறது. ஆனால், “வளையாபதி'யைப்பற்றி ஒரு செய்தியுமே தெரியவில்லை. புறத்திரட்டில் உள்ள சில பாடல்களைக் கொண்டு வளையாபதி என்ற நூல் இருந்திருப்பது தெரிகிறது.

ஐயரவர்கள் இளமைக் கால்த்தில் திருவாவடுதுறை மடத்தில் வளையாபதி’யின் ஏட்டுச் சுவடியைப் பார்த்தது உண்டாம். அப்போது அவரது கவனம் படிப்பில்தான் இருந்தது: ஏட்டுச் சுவடிகளைச் சேகரிப்பதில் செல்ல வில்லை. பிற்காலத்தில் சுவடிகளைப் பொன்னாகத் தொகுத்துப் போற்றும் உணர்வு வந்தபோது அந்தச் சுவடி கிடைக்கவில்லை. கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்ட வில்லையே என்ற வருத்தம், ஐயரவர்களுக்கு இருத்து வந்தது. - - - -