பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 348

ஆண்டு டிசம்பர் மாதம், கோவையில் நடை فيها. 1934 பெற்ற இவருக்குரிய வித்துவான் பரிசளிப்பு விழாவுக்கு ஐயரவர்கள் சென்றிருந்தார். விழா முடிந்தவுடன் அவர் அங்கிருந்து பழையகோட்டைக்கு வந்தபோது இவரும் அவருடன் சென்றார். . . .

காலையில் நீராடிவிட்டுச் சிற்றுண்டி அருந்திய பிறகு அவ்வூர்ப் பட்டக்காராரகிய நல்லதம்பி சர்க்கரை மன்றாடி யாருடன் ஐயரவர்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மணி 10 இருக்கும்; அவ்வூருக்குப் பக்கத்தில் ஒரு புலவரிடம் வளையாபதி இருப்பதாக மன்றாடியார் சொன்னார். :இப்போது அந்தப் புலவர் இருக்கிறாரா?’ என்று மிக்க ஆர்வத்தோடு கேட்டார் ஐயரவர்கள்.

அவர் இறந்துவிட்டார். அவரும் நிறையப் பாடி யிருக்கிறார். அவர் வீட்டில்தான் அந்த நூல் இருக்கிறது. அங்குள்ள சுவடிகளையெல்லாம் நான் இங்கேயே கொண்டு வரச் சொல்கிறேனே!’ என்றார் பட்டக்காரர். -

அதற்கு பூரீமத் ஐயர் சம்மதிக்கவில்லை; நாங்கள் அங்கேயே போய்ப்பார்க்கிறோம்” என்றார். -

அது சின்ன ஊர். அவர்கள் வீட்டில் பரணிலே சுவடிகளைப் போட்டிருப்பார்கள். நீங்கள் இந்த வயதில் அங்கெல்லாம் போய் அலைய வேண்டாமே!” என பட்டக் காரர். அன்பு ததும்பச் சொன்னார். - -

இவர் இப்போது தமிழ்க் காப்பியங்கள்பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரும் என்னுடன் இருப் பதால் அவசியமானால் இவரைப்பரண்மீது ஏறிப் பார்க்கச் சொல்கிறேன்’ என்றார் ஐயரவர்கள்.

இந்த வயதிலும் அவருக்கு இருந்த தமிழார்வத்தைக் கண்டு பட்டக்காரர் வியந்து போனார். தம் காரிலேயே பட்டக்காரர் அந்த ஊருக்கு இவர்களை அனுப்பி வைத்

தார்; வழிகாட்ட தம் தம்பியையும் உடன் அனுப்பினார்.