பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

战$9 - நாம் அறிந்த கி.வா.ஜ.

ஒரு முறை சரோடு வழக்கறிஞர் சேஷண்ணாவின் வீட்டில் இவர் தங்கியிருந்தார். அப்போது அயலூரிலிருந்து ஒரு நண்பர் இவரைப் பார்க்க வந்தார். அவரோடு இவர் பேசிக்கொண்டிருக்கையில், மறுபடியும் அடுத்த மாதம். இங்கே வருவேன். அப்போது பார்க்கலாம்’ என்று. இவர் சொன்னார். - -

  • அப்போது எங்கே தங்குவீர்கள்?’ என்று வந்தவர். கேட்டார். - - -
  • நான் எப்போதும் இங்கேதான் தங்குவேன். மற்ற, வீடுகள் எல்லாம் செங்கல் வீடு, மச்சு வீடு. ஈரோடில், சேஷண்ணா வீடு எனக்கு எப்போதும் தங்க வீடு” என்றார்கள். . -

சேஷண்ணாவின் துணைவியார் பெயர் தங்கம். தங்க. வீடு’ என்பது தங்குகின்ற வீடு, தங்கை வீடு, தங்கம் போன்ற வீடு என அவரவர்கள் விருப்பப்படி பொருள் தரும் சிலேடையாயிற்றே! யாவரும் மகிழ்ந்தார்கள். இப்படி நாமக்கல் சென்றால் கிருஷ்ணசாமி ஐயரின் வீட்டிலும், திருச்சியில் நடராஜன் வீட்டிலும், தஞ்சையில் ராமசந்திரையர் வீட்டிலும் தங்குவார். எந்த ஊருக்குப். போனாலுங்கூட அங்கங்கே குறிப்பிட்ட ஒரு வீட்டில்தான். தங்குவார். -

காலையில் எழுந்து நீராடித் தியானம் செய்வதற்கும், பல நண்பர்கள் வந்து பார்த்துப் போவதற்கும் வசதியாக, இருப்பதற்காக வெவ்வேறு இடமாக இருந்தால் சங்கடமாக, இருக்குமென்று ஒரே இடத்தில் தங்குவார்.

“இவர் வரமாட்டாரா?’ எனச் சிறியவர்முதல். பெரியவர் வரை இவரது வரவு நோக்கி எதிர்பார்த், திருக்கவைத்தது இவரது விநயமும், நயமிக்க இனிமையான பேச்சுமே யாகும். - . ... . - .

美 х х