பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - - 4】会

யாழ்ப்பாணம் உருப்பராயில் இருக்கும் சிதம்பர சுப்பிரமணியப் பெருமானே இவர் நினைவில் இருந்தார். இலங்கைக்கு இவர் பலமுறை சென்றிருக்கிறார். அங்கே இவருக்குப் பல அன்பர்கள் உண்டு. திரு.செ. தனபாலசிங்கம் என்பவர், எங்கள் சிதம்பர சுப்பிரமணியன்மேல் நீங்கள் அன்று பாடல்களேனும் எழுதி அளிக்க வேண்டும்’ என்று அங்கே சென்றபோது இவரிடம் கேட்டிருந்தார். அந்த நினைவே இவருக்கு மேலோங்கி நின்றது. -

நச்சுக் காய்ச்சலால் நலிவுற்றுச் சாத்துக்குடிச் சாறும், பார்லித் தண்ணிருமே அருந்திப் பாயலில் கிடந்த இவர் அப்போது பாடியதுதான், சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க் கதம்பம். -

தந்தையாரின் மறைவுக்குப் பிறகு தாயார் இவருடன் தான் இருந்து வந்தார். 1946-இல் அவர் நோய்வாய்ப் பட்டார். - - -

இவருக்குத் தம் அன்னையாரிடத்தில் அளவற்ற பக்தியும் பாசமும் உண்டு. எனவே, வெளியில் அதிகம் போகாமல் அன்னையாரின் படுக்கையின் அருகிலேயே இருந்தார். அப்போதுதான் வழிகாட்டி’ என்ற நூலை இவர் எழுதத் தொடங்கினார். பண்புமிக்க பதிப்பாளருடன் பழக்கம் :

வழிகாட்டி'யை எழுதுவதற்கு இவருக்கு மிகவும் உற்சாகமூட்டியவர் மயிலை அல்லயன்ஸ் கம்பெனி உரிமை பாளரான பூர் வி. குப்புசாமி ஐயரவர்கள். .

அவர் நான்கு முழத் துண்டோடு சென்னைக்கு வந்தவர். தம்முடைய நற்பண்புகளாலும், அயரா உழைப் பினாலும் கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறித் தமிழ்ப் பிரசுகர்த்தர்களின் முன்னோடி எனப் புகழையும் பெற்றார். 1895-ஆம் ஆண்டில் ஸ்டேஷனரி சாமான் விற்கும் கம்பெனியைத் துவக்கியவர், தம்முடைய அல்லயன்ஸ் கம்பெனியின் மூலம் 1907-ஆம் ஆண்டி , விருந்து ஏராளமான தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார்.