பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்’ மைந்தன் . . - 《28岁

இவரிடம் ஒருமுறை கேட்டார். இவரிடம் மிக நெருங்கிப் பழகியவர் அவர். . -

நீங்கள் இன்பம் என்பதை ஆண்டவனுடைய பிரசாத மாகக் கருதுகிறீர்களே துன்பம் என்பதையும் அவனுடைய பிரசாதமாகக் கருதினால் இரண்டிலும் என்ன வேறுபாடு காண இயலும்? அழுக்குத் துணியை அணிந்திருக்கும்போது அதில் கொஞ்சம் காபி சிந்திவிட்டது என்றால், யாரும் கவலைப்படுவதில்லை. சலவைத் துணியில் சிறிது சிந்தி விட்டால் உடனே அதைக் கழுவ நீர்தேடி அலை கிறோம். இப்ப்டித்தான் இறைவனும் மறு பிறப்பில்லாத அன்பரிடம் கொஞ்சம் அழுக்கு இருந்தால் தன்னுடைய ப்ரம கருணையினால் துடைத்துவிடுகிறான். அதைப் போய்த் துன்பம் என்று நினைக்கிறீர்களே!’ என்றார். இவர். - - و به ۔ - கையில் குடையுடன் மழை பெய்கிறதே என்பதற்தாக அஞ்சி எங்கும் ஒதுங்கி நிற்பதில்லை. அதுபோல் தெய்வ பக்தியுடையவர்களது வர்ழ்க்கைப் பயணமும், எதிர்ப்படும் இடர்களால் தடைப்படுவதில்லை’ என அன்று பெருமிதத். துடன் இவர் குறிப்பிட்டார்.

X X X அது என்னவோ உண்மைதான். பி. ஒ. எல். தேர்வுக் காகப் படித்துக்கொண்டிருந்தபோது இவருக்குப் பலவித. கான சோதனைகள் வந்தன். - - :

தாய் தந்தையர், சகோதரியர், தம்பி என அனை வரும் இவருடன் இருந்து வந்ததால் ஒரு வகையில் மன நிம்மதி இருந்தது. அதே சமயம் ஒருவரது வருமானத்தைக் கொண்டு பலரும் ஜீவனம் செய்ய வேண்டிய நிலை இருந்த தால் குடும்பத்தில் பொருள் முட்டுப்பாடு அதிகமாக இருந்தது:

எனினும் இவர், என்னைத் தாங்கும் முருகன் அவர் களையும் தாங்காமலா போவான்?’ என எதனைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. -