பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 நாம் அறிந்த கி.வாக

என்னைத் திட்டிக்கொண்டே போனார் அவர். பேசாமல் மேலும் கொஞ்சதூரம் வந்தபின் மற்றொருவரிடம் கேட்டேன். என்னோடு வாங்க என அவர் என் கையைப் பிடித்து உங்கள் வீடு வரைக்கும் அழைத்துக் கொண்டுவந்துவிட்டுப் போனார்.

இப்படிப் பலதரப்பட்ட மக்கள் வாழும் உலகம் அல்லவா இது! ஆனால் ஒன்று பாருங்கள்: இரண்டு. கண்ணும் இல்லாத நீங்க ஏன் இப்படித் தெருவிலே கிடந்து அலையlங்க’ என்று என்னை ஏசினாரே அவரைப் ப்ோன்றவர்களது செயலையே நாமும் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைந்து பலரிடமும் சொல்லி வருத்தப்படு கிறோம். சாலையின் மறு புறம் என்னைக் கொண்டுவந்து விட்டவர், இந்த வீடு வரைக்கும் என்னை அழைத்து வந்து விட்டவர் போன்ற நல்ல குணமுடைய உபகார்களை மறக்காமல் யாரிடமேனும் சொல்லி மகிழக் கற்றுக் கொண்டோமா? என்று என்னையே கேட்டார். . . .

அன்பர் கி.வா.ஜ. தம்மை ஏளனம் செய்தவர்களைப் புற்றியோ, அவதூறு பேசித் துன்பம் இழைத்தவர்களைப் பற்றியோ பகைமை பாராட்டிச் சொன்னதில்லை. - அவற்றை அப்போதே மறந்து மனத் துன்பமின்றி வாழ்ந்தார். - ... . தமக்குச் சிறிய உபகாரம் செய்தவரையுங்கூடப் பல படியாகப் பாராட்டிப் பேசியது. உண்டு. அவர்களை எப்போதும் மறக்காமல் மன மகிழ்வோடு இருந்தார். பிறருக்கும் அந்தப் பண்புகளையே அறிவுறுத்தினார். பண்புற் சிறந்த பெரியோர் இருவர்.

பூரீமத் ஐயர், என் சரித்திரம்” சம்பந்தமாக எழுதத் தொடங்கியவுடன் தம் பேருழைப்பு க்கு உதவியாக . இருந்தவர்களைப்பற்றி அவர் சொல்லி வந்த நிகழ்ச்சிகள்:

மிக அதிகமாகும்.