பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 13 கும: (கல்லறைக்கருகே) அம்மா... நான் பைத்தியக்கார ம்மா... நான் பைத்தியமாம்மா...? சஞ்சீவி :-பைத்தியம் என்றுதான் சொல்லுவார்கள் குமரா ! நானே உன் புது வரலாற்றை நம்ப முடியவில்லை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள் ? குமரன் :- ஆ... அப்படி ஒரு உயில் எழுதப்பட்டதாவது உங்களுக்குத் தெரியாதா? சஞ்சீவி :-உயில் எழுதப்பட்டது தெரியும். விண்ணிலே நட்சத்திரங்கள் விழுவதை பார்க்கமுடியும்! ஆனால், அது எங்கே விழுந்தது என்று கண்டு பிடிப்பது தானே கஷ்டம். கும:-எங்கே இருந்தாலும் சரி! இடத்தை மட்டும் சொல்லுங்கள். சஞ்சீவி :-பளிங்கு மண்டபத்திலே பார்வைக்கா வைத் திருப்பார்கள்! அது எந்த பாம்புக் காட்டுக்குள் பதுங்கி இருக்கிறதோ... குமரன் :- பாம்புக்காடு--பா தாளச் சுரங்கம்! இடத்தை மட்டும் சொல்லுங்கள் வைத்தியரே. $ சஞ்சீவி :-உயில் ஒரு வாள் ! அதை சட்டம் என் என்னும் சாணைக்கல்லிலே தீட்டவேண்டும். பிறகுதான் நீ நீதி மன் றம் என்னும் போர்க்களத்திலே மலையப்பனை சந்திக்க முடி மானவர்க யும். இந்தச் சாணைக்கல்லை வாங்க சாதாரண ஏராளமான சம்பத்துகள் தேவை 1 இந்த யோசனை சொல்வதால் உயில் இருக்கும் இடம் எனக்குத் தெரியும் என்று யூகித்து விடாதே. ளால் முடியாது 1 ள மாவ குமரன் :- வைத்தியரே.. ஏமாற்றம்தான் பதிலா? சஞ்சீவி :- ஏமாற்றத்தையும் ஏணிப்படியாக்கிக் கொள் வார்கள், இங்கிதம் தெரிந்தவர்கள். வழக்கு நடத்த பணம் தேவை ! பிறகு உயிலைத் தேடு. (குமரன் போய் விடுகிறான்) (பிரேமா வருகிறாள்.)