பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அண்ணாமலை :-விடா தீங்க இவனை! 28 மாத்திரை:- இது ஜமீனுக்கு அடிமை பிசாசு! இது மக்களை (பூசாரி) ஏமாற்றுகிற பிசாசு! இந்த இரண்டுக்கும் பெரியது ஐமீன்தார் பிசாசு! அண்ணாமலை :- இவன் பேச்சை நம்பாதீங்க! மாத்திரை இவன் பேச்சை நம்புங்க! ஊரு உருப் பட்டுப் போகும்! குமரன் பிசாசு இல்லே .. ஜீவானந்தர்:-மாத்திரை! ஏம்பா இந்த வம்பு ? நீ தான் நிரூபிச்சிக் காட்டேன். மாத்திரை:- இவரு வேறே.. ரெண்டும் கெட்டான். இப்ப நிரூபிச்சிக் காட்றேன் பாருங்க. அண்ணாமலை :-ஓடிட்டாண்டோ... மாத்திரை :- அய்யோ... (போகிறான்) (குமரன் வருகிறான் பலர் பயப்படுகின்றனர்) குமரன்:- ஏன் பயப்படுகிறீர்கள்? நான் பேய் இல்லை! பேய் என்று ஒன்று இல்லவே இல்லை! பேய்க்கு சொல்லப் படும் இலட்சணங்கள் மனித ரூபத்தில் தான் நடமாடுகின் றன! வீரர்கள் உலாவுகின்ற பூமியிலே வாழந்த நாம்... விவேகிகளின் மண்ணிலே வாழ்ந்த நாம்...வெறும் கற்ப னைக் கதைக்கு - விஷமக்காரர்கள் கட்டி விடும் கட்டுக் கதைகளுக்கு அடிமையாவ தா? அறிவை இழப்பதா? ஆண்மையை பலியிடுவதா? பணத்துக்காக இனத்தை காட்டிக் கொடுத்தவன் ஒரு பேய்! சொந்த வாழ்க்கையை நந்தவனமாக்கிக் கொண்ட நயவஞ்சகன் ஒரு பேய்! சூது செய்து சுரண்டிப் பிழைப்பவன் ஒரு பேய்! நண்பர்களே... சிந்தித்துப் பாருங்கள்.... நானா பேய்? உங்க ளில் வீரர்கள் ஒருவருமே இல்லையா? எச்சில்