பக்கம்:நாயகர் பெருமான்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பஹீரா சிறந்த கல்வியறிவுடையவர். பழம் வேதங்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம்.

அவர் ஒரு நாள் சிறு பையனாயிருந்த பெருமானை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பெருமானவர்களின் முகப்பொலிவும், அறிவு நுட்பமும், இனிய மொழிகளும், குணச் சிறப்புக்களும் அவருக்கு ஓரு கருத்தை நினைவுபடுத்தின. பழம் வேதங்களில், உலகில் வெளியாகப் போகும் இறைவனுடைய திருத்தூதரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் மொழிகள் அவர் நினைவுக்கு வந்தன.

பஹீரா என்னும் அத்துறவி அபூதாலிப்பை அருகில் அழைத்து, “ஐயா, இக் குழந்தையைக் கருத்தோடு கவனித்துக் கொள்ளுங்கள். அரேபிய நாட்டிற்கு ஒரு கதிரவன் போல் இது பிறந்திருக்கிறது. ஈசா நபியவர்களின் முன்னறிவிப்பின்படி இறைவனால் உலகுக்குக் கடைசியாக அனுப்பப்படுகிற நபி இவர் தாம். இவருக்கு யூதர்களால் இடையூறு வரக் கூடும். கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் அந்த நல்லவர். (ஈசா நபி-இயேசு நாதர்)

4. கலகம் தீர்த்த காவலர்

மக்காவிலே கஅபா ஒரு புனிதமான திருத்தலம். இத் திருத்தலத்தின் சுற்றுமதில்கள் பழுது பட்டிருந்தன. அதனால், வெள்ளப் பெருக்கு ஏற்படும்