பக்கம்:நாயகர் பெருமான்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பெருமானவர்களைக் கண்டாலே அவனுக்கு ஆத்திரம் பொங்கி எழும். ஒரு நாள் அவன் நபிநாயகம் அவர்களின். தலையைக் குறி பார்த்துக் கல்லெறிந்தான். அதனால் பெரிய காயம் உண்டாயிற்று. பெருமானவர்கள் பெருந்துன்பத்துக் காளானார்கள். வேட்டைக்குச் சென்று திரும்பி வந்த ஹம்ஸா அவர்கள் இச் செய்தியைக் கேட்டதும் பதறிப் போனார்கள். உடனே பெருஞ் சினத்துடள் அபூஜாஹில் என்ற அத்தீயவனைத் தேடிச் சென்றார்கள். நண்பர்களுடன் உல்லாசமாய் விளையாடிக் கொண்டிருந்த அவன் தலையைக் குறிபார்த்து ஓர் அம்பெய்தார்கள். அந்த அம்பு அவன் தலையிற் பாய்ந்து பெரிய காயத்தை ஏற்படுத்தியது. அதைக் கண்ட பிறகுதான் மன அமைதியடைந்து ஹம்ஸா அவர்கள் திரும்பினார்கள்.

நேராகக் கஅபா என்னும் புனிதத் தலத்திற்குச் சென்று வலம் வந்து, பின் பெருமானிடம் திரும்பி வந்தார்கள்.

“முஹம்மது! வருத்தம் வேண்டாம். உன் பகைவனைப் பழி வாங்கி விட்டேன்” என்று நடந்த செய்தி களை விளக்கிக் கூறினார்கள்.

அது கேட்ட பெருமானவர்கள் தன் சிற்றப்பாவை நோக்கி, “என் அருமைச் சிறிய தந்தையே, இஸ்லாத் தின் பகைவரைப் பழிவாங்க வேண்டும் என்பது என் கருத்தன்று. அவர்களைத் துன்புறுத்துவதால் பயன்

-2-