பக்கம்:நாயகர் பெருமான்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்த உமரை எதிர்சென்று கண்டார் நபி நாயகம். அவருடைய சட்டை நுனியைப் பற்றிக் கொண்டு, “உமர், என்ன நோக்கத்தோடு இங்கு வந்தீர்?” என்று கேட்டார்.

ஏற்கனவே மனம் மாறிப் போயிருந்த உமர் அவர்கள் வணக்கத்துடன் இனிய குரலில் “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவே இங்கு வந்தேன்!” என்று கூறினார்கள்.

“ஆண்டவன் மிகப் பெரியவன்” என்ற திரு மொழி நபிநாயகப் பெருமானின் திருவாயிலிருந்து வெளிப்பட்டது. வியப்பும் திகைப்பும் களிப்பும் ஒருங்கே கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவரும் அதே திருவாசகத்தை உரத்துக் கூவினர். அந்த ஒலி மக்கா மலையிலே சென்று முட்டி எதிரொலித்தது.

அதுவரை மறைவான இடங்களிலே கூடித் தொழுகை நடத்தி வந்த முஸ்லிம்கள், உமர் தங்கள் மார்க்கத்தில் சேர்ந்த பின், அச்சம் நீங்கி கஅபா விலேயே சென்று தொழுகை நடத்தத் தொடங்கினார்கள்.

10. காதில் விழுந்த வேத வாசகம்

மக்காவுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவர் ‘தவுஸ்’ என்றும் பெரிய குடும்பத்தின் வழியில் வந்த பெருமை யுடையவர்.