பக்கம்:நாயகர் பெருமான்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இருக்கச் செய்து அவர்கள் மட்டும் இரவில் வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிய போது இறைவன் அருளால் வெளியில் காத்திருந்தவீரர்கள் கண்களுக்குத் தென்பட வில்லை. வீட்டை விட்டு வெளியேறிய பெருமான் ஹஸரத் அபூபக்கர் வீட்டுக்குச் சென்றார்கள்.

இருவரும் அங்கிருந்து புறப்பட்டு மூன்று கல் தொலைவில் உள்ள தௌர் என்னும் மலைக் குகையில் தங்கினார்கள். அக் குகைக்குள் மூன்று நாள் வரை தங்கினார்கள்.

பெருமான் வீட்டைச் சூழ்ந்திருந்த அரபியர்கள் பொழுது விடிந்த பின், வீட்டில் பெருமான் இல்லாதது கண்டு ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். எவ்வாறேனும் கண்டு பிடித்துக் கொன்று விடுவது என்ற உறுதியுடன் எல்லாத் திசைகளிலும் புறப்பட்டுச் சென்றனர்.

பெருமானையோ, ஹஸரத், அபூபக்கரையோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று விளம்பரப் படுத்தினார்கள். இதனால் பரிசுக்கு ஆசைப்பட்டுப் பலர் பெருமானைத் தேடத் தொடங்கினார்கள்.

அத் தீயவர்களில் சிலர் தௌர் மலைப்பக்கமாகவும் சென்றனர். அம்மலைக் குகையின் வாயிலை அணுகிய அவர்கள், பெருமான் அவர்கள் குகைக்குள் ஒளிந்திருக்கக் கூடும் என்று எண்ணினார்கள்.