பக்கம்:நாயகர் பெருமான்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

இருந்த துயரமெல்லாம் பஞ்சாய்ப் பறந்து போயிற்று. அமைதி நிறைந்த உள்ளத்தோடும், பெருமானைக் காணப் போகிறோம் என்ற ஆவலோடும் அவள் களம் சென்றாள்.

களத்திலே பெருமான் அவர்களின் திருமுகத்தை நேரில் கண்டவுடன், அவர் தன்னை அடக்க முடி யாத உணர்ச்சியுடன் பெருமான் அவர்களே, தாங்கள் உயிருடன் இருக்கும் பொழுது எங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவையாவும் அற்பமாகி விடுகின்றன. தீன் என்னும் சன்மார்க்கத்தின் மன்னரே, நானும் என் தந்தையும் சகோதரரும், கணவரும் தங்களுக்கே ஆளாகிவிட்டோம்! உலகம் தங்களைப் பெற்றிருந்தால் உய்யும்! நாங்கள் இருந்தால் என்ன, இல்லா விட்டால் என்ன? தாங்கள் இருப்பதே பெருமகிழ்ச்சி!” என்று கூறி உள்ளங் களி கூர்ந்தாள்.

ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற வந்த திருத்தூதர் பெருமான் என்ற உண்மையான நம்பிக்கை யின் விளைவே யன்றோ இந்த மெய்யன்பு!

16. உயிருக்குயிரான பெருமான்

குறைஷி ஒருவனிடம் ‘ஸைத்’ என்பவர் அடிமையாக இருந்தார். அந்தக் குறைஷி முஸ்லிம் ஆகிய ஸைத்தை வெட்டிக் கொல்ல முடிவு செய்தான், அதற்காக ஒரு நாள் குறிப்பிட்டு குறைஷி இனத்தவரில்